"உன்னோட 20 நிமிஷம் கூட வாழ முடியாது.." வீட்டுல 'HIDDEN கேமரா'.. கணவனின் டார்ச்சர்.. பெண்ணின் பரபரப்பு முடிவு
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூர் : பெண் பத்திரிகையாளர் ஒருவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லை மீறிய பிராங்க்.. கடுப்பான சஞ்சு சாம்சன்.. அதிரடி முடிவெடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி..
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், பெங்களூரில் அமைந்துள்ள செய்தி நிறுவனம் ஒன்றில், சீனியர் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
கடந்த சுமார் 4 ஆண்டுகளுக்கு முன், அவருக்கும், கேரளாவின் காளிபரம்பு பகுதியைச் சேர்ந்த அனீஸ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
சொந்த ஊரில் கணவர்
இதனைத் தொடர்ந்து, கணவன் மனைவி இருவரும், பெங்களூரில் வசித்து வந்துள்ளனர். அனீஸ் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத நிலையில், பெண் பத்திரிக்கையாளர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த சமயத்தில், அனீஸ் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
போன் ஸ்விட்ச் ஆப்
இதனிடையே, பெங்களூரில் வசிக்கும் பெண்ணின் சகோதரரான நிஷாந்த் என்பவர், சகோதரிக்கு தொடர்ந்து போனில் அழைத்துள்ளார். அப்போது, அவர் போனை எடுக்கவில்லை. அதே போல, அவரின் போன், ஸ்விட்ச் ஆப் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவர் தங்கி இருந்த அபார்ட்மெண்ட் சென்று பார்த்த போது, வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
கதவைத் திறந்ததும் அதிர்ச்சி
உடனடியாக, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, தூக்கில் தொங்கிய நிலையில், இறந்து கிடந்துள்ளார் அந்த பெண். இதுகுறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வேண்டி அனுப்பி வைத்தனர். இதனிடையே, திருமணமான நாள் முதல், அனீஸ் தன்னுடைய மனைவிக்கு தினந்தோறும் சித்ரவதை அளித்து வந்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, மனைவி மீது கொலை முயற்சியிலும் அனீஸ் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணவர் குறித்த கடிதம்
பெண் பத்திரிக்கையாளர் வீட்டில் இருந்து தற்கொலை குறிப்பும் கிடைத்துள்ளது. "நான் எனது வாழ்க்கையை முடித்துக் கொண்டால், நாம் இருவருக்கும் சந்தோஷம் தான்" என கணவரைக் குறிப்பிட்டு எழுதி உள்ளார். அதே போல, "இந்த கொடுமையான வாழ்க்கையில் இருந்து நான் தப்பிப்பதால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உன் வாழ்க்கையில் நான் இனி இருக்கமாட்டேன் என்பதால் நீயும் மகிழ்ச்சியாக தான் இருப்பாய்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "20 நிமிடங்களுக்கு மேல் உனது சித்ரவதையை யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது. மீண்டும் திருமணம் செய்ய முடிவு எடுத்தால், காது கேளாத மற்றும் பார்வையற்ற பெண்ணை திருமணம் செய்து கொள். அப்படி இருந்தால், நீ துன்புறுத்துவதை அவளால் பார்க்கவும், கேட்கவும் முடியாது" என கணவரின் மோசமான நிலை பற்றியும், குறிப்பிட்டு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து சித்ரவதை
இன்னொரு பக்கம், தன்னுடைய பெற்றோர்களுக்கு வேண்டியும், அந்த பெண், கடிதம் ஒன்றை எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரித்த போலீசார், அனீஸ் மீது சில பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அனீஸ் மனைவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, சொந்த ஊர் சென்ற அவரைத் தொடர்பு கொள்ள போலீசார் முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
பெண்ணின் குடும்பத்தினர் கூறியுள்ள தகவலின் அடிப்படையில், மனைவி மீது சந்தேகம் கொண்டுள்ள அனீஸ், வீட்டின் பல இடங்களில் Hidden Camera மற்றும் மைக்கினை வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அதே போல, தன்னுடைய பெற்றோருக்கு பணம் அனுப்பினாலும், அதை பற்றி கேட்டு, மனைவியை சித்ரவதை செய்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் பற்றி இருவரின் குடும்பத்தினர் கவனத்திற்கு வர, அவர்கள் அனீஸுக்கு அறிவுரை கூறியுள்ளனர். ஆனாலும், அதனை கேட்காமல் தொடர்ந்து மனைவியை சித்ரவதை செய்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. நான்கு ஆண்டுகள் பொறுத்துக் கொண்டு வாழ்ந்து வந்த பெண், இறுதியில் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிர் விலை மதிப்பற்றது. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
மதுரையில் பரதநாட்டியம் ஆடும்போதே மரணம் அடைந்த கலைஞர்.. மேடையிலேயே பிரிந்த உயிர்..!