இனிமே M.PHIL படிப்புகள் கிடையாது!.. என்ஜினியரிங் மாணவர்களுக்கு அடித்த 'சூப்பர் ஜாக்பாட்'!.. புதிய கல்விக் கொள்கையில் அப்படி என்ன இருக்கு?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Jul 29, 2020 06:26 PM

M.Phil படிப்புகள் நிறுத்துவதோடு பல மாற்றங்களை உள்ளடக்கிய புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது

centre approves new education policy mphil discontinued students

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்ததையடுத்து, கல்விக்கொள்கை குறித்து மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

* கல்வித்துறையில் முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

* 34 ஆண்டுகளாக கல்விக்கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது.

* மத்திய மனித வள அமைச்சகம் கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* 2030-க்குள் அனைவருக்கும் கல்வி என்பதே புதிய கல்விக்கொள்கையின் இலக்கு.

* உயர்கல்வி அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும்.

* முதல் ஆண்டில்  பழைய மற்றும் புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்படும்.

* 2 ஆம் ஆண்டில் புதிய கல்விக்கொள்கை முழுமையாக அமலில் இருக்கும்.

* பொறியியல் போன்ற உயர்கல்வி படிப்புகளில் மாணவர்கள், ஓரிரு வருடங்கள் விடுப்பு    எடுத்துக்கொண்டு மீண்டும் படிப்பை   தொடரலாம்.

* 15 ஆண்டுகளில் இணைப்புக்கல்லூரி என்ற முறை நிறுத்தப்படும்.

* எம்.பில் (M.Phil) படிப்புகள் நிறுத்தப்படுவதாக புதிய கல்விக்கொள்கையில் அறிவிப்பு.

* நாடு முழுவதும் ஒரே கல்வித்தரம் கொண்டு வரப்படும்.

* கல்வி அறிவு குறைவாக உள்ள பகுதிகளில் சிறப்பு கல்வி மண்டலங்கள் உருவாக்கப்படும்.

*  தேசிய ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும்.

* இணைய வழி பாடங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்படும்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் வெளியிடப்படும்.

* பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.

* கல்வி கட்டணங்கள் தன்னிச்சையாக அதிகரிக்கப்படாது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Centre approves new education policy mphil discontinued students | India News.