மருத்துவராகும் கனவு.. திருமணம் முடிந்த அடுத்த நிமிஷமே லேப் கோட்டுடன் தேர்வுக்கு போன புதுமணப்பெண்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Feb 13, 2023 04:31 PM

கேரளாவில் திருமணத்தன்று மருத்துவ மாணவி ஒருவர் தேர்வு எழுத சென்ற வீடியோ சமூக வலை தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

Kerala Bride attends Exam on the day of Marriage video goes viral

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | என்னை அறிந்தால்.. அஸ்வின் & ஜடேஜாவை பத்தி வைரலான மீம் வீடியோ.. அஸ்வினின் ஜாலி கமெண்ட்..!

தற்போதைய நவீன காலம் பெண்களுக்கான பல்வேறு கதவுகளை அகல திறந்து இருக்கின்றன. அதன் காரணமாகவே பெண்கள் தங்களது சொந்தக் காலில் நிற்கும் வகையில் தங்களது கல்வியை மிகுந்த கவனத்துடன் பயின்று வருகின்றனர். திருமணத்திற்கு பிறகு கல்வி கற்கும் வாய்ப்பு பெண்களுக்கு ஒரு காலத்தில் மறுக்கப்பட்டு வந்ததை நாம் மறுத்து விட முடியாது. ஆனால் அதேநிலையில் தற்போதைய சூழ்நிலை சற்றே மாறி இருக்கிறது. அந்த வகையில் கேரளாவில் திருமணம் முடிந்த கையோடு மருத்துவ மாணவி ஒருவர் தேர்வு எழுத சென்று இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ லட்சுமி அனில். இவர் அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் பிசியோதெரபி படித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. செய்முறை தேர்வு அன்று திருமணம் நிச்சயிக்கப்படவே என்ன செய்வதென்று யோசித்த ஸ்ரீ லட்சுமி சரியாக திருமணம் முடிந்த கையுடன் மணக்கோலத்திலேயே சென்று தேர்வையும் எழுதி இருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

அந்த வீடியோவில் அவர் கல்யாண புடவையில் கல்லூரிக்குள் நுழைகிறார். மணக்கோலத்தில் இருந்த அவருக்கு அவரது தோழிகள் கோட் அணிவித்து கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டி விடுகின்றனர். அதேபோல மற்றொரு வீடியோவில் ஸ்ரீ லட்சுமி கல்லூரிக்கு வரும் வழியிலேயே தேர்வுக்கு தயாராகி வருவதும் தெரிகிறது. தேர்வு அறைக்குள் தோழிகளில் ஒருவர் அவரது புடவையை சரி செய்ய மற்றொருவர் அவருக்கு வாழ்த்து சொல்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

பரிட்சை முடிந்து வெளியே வந்த ஸ்ரீ லட்சுமி தனக்காக காத்திருந்த தனது தாயை கட்டியணைத்து மகிழ்வதும் இந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவ பலரும் ஸ்ரீ லட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read | மொத்த நகரமே ஒரு கட்டிடம் தான்.. ஸ்கூல், போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் உள்ளேயே இருக்கு.. இப்படியும் ஒரு இடமா.?

Tags : #KERALA #BRIDE #EXAM #MARRIAGE #KERALA BRIDE ATTENDS EXAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kerala Bride attends Exam on the day of Marriage video goes viral | India News.