‘மாறிய இந்திய வரைபடம்’.. இன்று முதல் அதிகாரபூர்வமாக யூனியன் பிரதேசங்களான ஜம்மு-காஷ்மீர்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Oct 31, 2019 12:01 PM
ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் இன்று முதல் அதிகாரபூர்வமாக யூனியன் பிரதேசங்களாகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு, காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்தது. இதனை அடுத்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மறுசீரமைப்பு சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இன்று (31.10.2019) முதல் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் அதிகாரபூர்வமாக யூனியன் பிரதேசங்களாகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை 29-ல் இருந்து 28 ஆகவும், யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 7-ல் இருந்து 9 ஆகவும் அதிகரித்துள்ளது. இதில் ஜம்மு காஷ்மீருக்கு துணைநிலை ஆளுநராக கிரிஷ் சந்திராவும் மற்றும் லடாக்கிற்கு ஆர்.கே மாத்தூரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Tags : #JAMMUANDKASHMIR