மத்திய பட்ஜெட் 2022 -23 - நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Pandidurai T | Feb 01, 2022 11:53 AM

2022-23ஆம் ஆண்டுக்கான காகிதமில்லா மின்னணு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட லேப் டாப்பில் பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும். பல்வேறு அதிரடியான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

Nirmala Sitharaman presented the budget for 2022-23

பட்ஜெட் உரையின் முழு விவரங்கள்

மாணவர்களுக்காக டிஜிட்டல் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடி மையங்கள் உருவாக்கப்படும். டிஜிட்டல் முறையில் கற்ப்பித்தல் ஊக்குவிக்கப்படும்.

  • 1-12ஆம் வகுப்பு வரை மாநில மொழி கல்வி ஊக்குவிக்கப்படும்.
  • கூடுதலாக 200 கல்விச் சேனல்கள் உருவாக்கப்படும்.
  • நாடு முழுவதும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 400 ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
  • 22 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்படும்.
  • இயற்கை விவசாய முறை ஊக்குவிக்கப்படும். வேளாண் பொருள்கள் கூடுதலாக கொள்முதல் செய்யப்படும்.
  • ட்ரோன் மூலம் விவசாய நிலங்கள் அளவீடு, கண்காணிப்பு
  • 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில்வே கட்டமைப்பு மேம்பாடு 62 லட்சம் மக்களுக்கு குடிநீர் புதிதாக வழங்கப்படும்.
  • ரூ.44 ஆயிரம் கோடி செலவில் நீர்ப் பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
  • அடுத்த 25 ஆண்டுகளுக்கான ப்ளூ பிரிண்ட்
  • அடுத்த 5 ஆண்டுகளில் மேக் இன் இந்தியா திட்டத்தால் 60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். 
  • நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.27%  ஆக இருக்கும் என கணிப்பு .
  • ஏர் இந்தியாவுக்கு அடுத்து எல்.ஐ.சி?

    எல்.ஐ.சி. நிறுவனத்தின் பொது பங்குகள் விரைவில் வெளியிடப்படும்.

  • தபால் அலுவலக கணக்கில் இருந்து வங்கிக்கணக்கிற்கு ஆன்லைன் பணப்பரிமாற்றத்திற்கு அனுமதி.
  • நவீன தொழில்நுட்பத்துடன் சிப் பொருந்திய இ-பாஸ்போர்ட் முறை அறிமுகப்படுத்தப்படும்.
  • சிறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதலாக 2லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க நடவடிக்கை
  • நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும்.
  • ரூ.60 ஆயிரம் கோடியில் 18லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை
  • 200 கல்வி தொலைக்காட்சிகள் உருவாக்கப்படும்
  • பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு 18 லட்சம் வீடுகள் கட்ட ரூ.48ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
  • கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மீள்வதற்காக தேசிய மனநல சிகிச்சை திட்டம் அறிமுகப்படுத்தப்படும்  என்று குறிப்பிட்டுள்ளார். 

Tags : #NIRMALA SITHARAMAN #2022-23 #INDIA #2022BUDGET #FINANCE MINISTER #UNION BUDGET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Nirmala Sitharaman presented the budget for 2022-23 | India News.