இந்திய ராணுவத்தின் அடுத்த அதிரடி.. வானத்தில் பறக்கும் வீரர்கள்.. சல்யூட் அடிக்க வைக்கும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஎல்லை பகுதிகளை கண்காணிக்க பறக்கும் ஜெட் பேக்-குகளை வாங்க முடிவெடுத்துள்ளது இந்தியா. இந்நிலையில், இந்த பயிற்சி வீடியோக்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளில் கமல் நெகிழ்ச்சி வாழ்த்து. என்ன சொல்லிருக்காரு பாருங்க.!!
எல்லைப் பகுதிகளில் அதன் ஒட்டுமொத்த கண்காணிப்பு மற்றும் போர்த் திறன்களை மேம்படுத்துவதற்காக இந்திய ராணுவம் அவசரகால ஜெட்பேக் உடைகளை வாங்கத் தொடங்கியதை அடுத்து, ஆக்ராவில் உள்ள இந்திய ராணுவ வான்வழிப் பயிற்சிப் பள்ளியில் இந்த சாதனத்தின் செயல் விளக்கம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. .கிராவிட்டி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் ரிச்சர்ட் பிரவுனிங், திங்களன்று ஆக்ராவில் உள்ள நீர்நிலைகள், கட்டிடங்கள் மற்றும் வயல்களின் மீது ஜெட்பேக்-கின் செயல் திறனை விளக்கினார்.
ஜெட் பேக் சூட் என்பது அதை அணிபவரை பறக்க வைக்கும் ஒரு சாதனமாகும். இதற்காக வாயு அல்லது திரவம் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம், பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்ல முடியும். அதேநேரத்தில் விரைவாக ராணுவ வீரர்கள் பயணிக்கவும் இது துணை புரியும். இதுகுறித்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகள் ஆக்ராவில் உள்ள இந்திய ராணுவ வான்வழி பயிற்சி பள்ளி (ஏஏடிஎஸ்) -ல் நடைபெற்று வருகின்றன.
Images are subject to © copyright to their respective owners.
முன்னதாக இந்திய ராணுவம் கடந்த ஜனவரி மாதத்தில் 48 ஜெட் பேக் சூட்களை வாங்குவதற்கான அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், அதிகபட்சமாக மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் 80 கிலோகிராம் பேலோடுடன் பறக்கக்கூடியதாக இருக்க வேண்டும். மேலும் இது பாலைவனம், மலை மற்றும் 3000 மீ உயரம் வரை உயரமான சூழ்நிலைகளில் செயல்படும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
Images are subject to © copyright to their respective owners.
இந்த சூழ்நிலையில் கிராவிட்டி நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் ப்ரௌனிங் திங்கட்கிழமையன்று ஆக்ராவில் உள்ள இந்திய ராணுவ வான்வழிப் பயிற்சிப் பள்ளியில் இதற்கான டெமோவை அளித்தார். இந்தியா எல்லைப் பகுதியில் ஏற்படும் பதற்றங்களை தவிர்க்கவும், ராணுவத்தின் அவசரகால போக்குவரத்தை அடுத்த உயரத்திற்கு எடுத்துச்செல்லவும் இது பயன்படும் என்கின்றனர் அதிகாரிகள். இந்நிலையில் இந்த பயிற்சி வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
Yesterday, Richard Browning the founder of #Gravity Industries gave a demo of their #Jetpack system to the Indian Army in #Agra.
The #IndianArmy has issued the requirement to procure 48 such systems.#IADN pic.twitter.com/0dcEW3hjyb
— Indian Aerospace Defence News (IADN) (@NewsIADN) February 28, 2023
Also Read | வானத்தில் இருந்து கொட்டிய மீன் மழை.. அதிசயப்பட்டு போன மக்கள்.. அதுவும் பாலைவன பூமியில எப்படி?