50 பேர்... 0.5 மிலி... தமிழகத்தில் இன்று முதல் COVAXIN பரிசோதனை ஆரம்பம்!.. மருத்துவர்கள் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் கொரோனா நோய்க்கான தடுப்பூசி கோவேக்சின் (COVAXIN) மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் ஆய்வு இன்று முதல் தமிழகத்தில் தொடங்கியது.

உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர ஒரே தீர்வு தடுப்பூசி மருந்தை கண்டுபிடிப்பது தான். தடுப்பூசி மருந்தை கண்டுப்பிடிக்க பல நாடுகள் ஆராய்ச்சியை முன்னெடுத்துள்ள நிலையில், நமது இந்திய ஆராய்சியாளர்களும் அதற்கான சோதனையில் முதற்கட்ட வெற்றியை பெற்றுள்ளனர்.
ஹைத்திரபாத்தில் உள்ள 'பாரத் பயோடெக்' என்ற நிறுவனத்துடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் இனைந்து தயாரித்த கோவேக்சின் மருந்து பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு, இரண்டு கட்டங்களாக மனிதர்களிடத்தில் சோதனை செய்ய அனுமதி பெற்றுள்ளது.
கோவேக்சின் தடுப்பூசி பல்லேறு தர மக்கள் மீது சோதனை செய்ய, இந்திய மருத்து ஆராய்ச்சிக் கழகம் நாடு முழுவதும் 12 மருத்துவ மையங்களை தேர்வு செய்தது. அதன்படி தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துமனைக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.
இங்கு மொத்தமாக 50 நபர்களுக்கு இரண்டு கட்டங்களாக கோவேக்சின் செலுத்தப்பட்டு சோதனை செய்யப்படும். 18 வயதில் இருந்து 55 வயதிற்கு உட்பட்ட, உடலில் எந்த நோய்பாதிப்பும் இல்லாத தன்னார்வலர்களை பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளனர்.
பல்வேறு பணி சூழல்களை கொண்ட நபர்கள் சோதனைக்கு அழைக்கப்படுகின்றனர். தேர்வானவர்களின் அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்படுகின்றது. எந்த பாதிப்பும் இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின், அவர் கோவேக்சின் மருந்து செலுத்த தேர்ந்தெடுக்கப்படுவார்.
அதன்படி முதல்கட்டமாக 0.5 மிலி கோவேக்சின் மருந்தானது கைகளில் மேல்புறமாக செலுத்தப்படும். கோவேக்சின் மருந்தை எடுத்துக்கொண்டவர் தினமும் மருத்துவர் கண்காணிப்பில் இருந்தாலும், அவர் மக்களோடு மக்களாக தனது அன்றாட பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்.
பதினான்கு நாட்கள் முடிவில் மீண்டும் இரண்டாவது முறையாக கோவேக்சின் மருந்து மீண்டும் அந்த தன்னார்வளர்க்கு செலுத்தப்படும். இதனையடுத்து 28 நாட்களுக்கு பிறகு அவரது ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்படும்.
அதில் எந்த அளவு கொரோனா தொற்றுக்கு எதிராக அவரது உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் வளர்ந்துள்ளது என்று பரிசோதனை செய்யப்படும். மொத்தமாக 50 பேர் முடிவு வந்த உடன் சோதனை முடிவுகள் இந்திய மருத்திவ ஆராய்சி கழகத்திற்கு அனுப்பப்படும்.

மற்ற செய்திகள்
