'சுழற்றி அடிக்க போறேன்'...'ரெடியா இருந்துக்கோங்க'...தயார் நிலையில் 'கடற்படை'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Apr 30, 2019 10:58 AM
வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் ஃபனி புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றிருக்கும் நிலையில்,இந்திய கடற்படை எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் தயார் நிலையில் இருக்கிறது.
ஃபனி புயலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் நிலையில் அது,வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா கடற்பகுதி நோக்கி செல்லும் நிலையில், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஃபனி புயல் தீவிர புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளதால், இந்திய கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய கடலோர காவல்படை உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன.இதனிடையே நேற்று வானிலை மையம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் ஃபனி புயலானது சென்னைக்கு 770 கி.மீ தொலைவிலும், ஆந்திரவிற்கு 900 கி.மீ மையம் கொண்டிருந்தது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை கப்பல்கள்,மீட்பு பணிகளில் ஈடுபட எந்நேரமும் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனிடையே நேற்று அவசர ஆலோசனை மேற்கொண்ட,தேசிய நெருக்கடிக்கால மேலாண்மைக் குழு,புயலின் தாக்கம் குறித்து பிரதமருக்கு அவ்வப்போது தகவல்கள் அனுப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் புயல் காரணமாக இந்த வாரம் நடைபெறுவதாக இருந்த இந்திய விமானப்படையின், பிரமோஸ் எவுகணை சோதனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதனால் இந்த பபகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மேலும் 10 லட்சம் மக்கள் வரை தங்கும் வகையிலான 879 முகாம்கள் ஒடிசாவில் தயார் நிலையில் இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.