'சட்டசபை வரலாற்றில் முதல் முறை'... 'மாமனாரும், மருமகனும் ஒன்றாக சட்டசபைக்குள் நுழையும் ஆச்சரியம்'... சுவாரசிய பின்னணி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | May 03, 2021 06:54 PM

முதல் முறையாக மாமனாரும், மருமகனும் எல்எல்ஏவாகி சட்டப்பேரவைக்குச் செல்ல உள்ளனர்.

In a first for Kerala, father-in-law CM and son-in-law MLA in Assembly

கேரள அரசியல் வரலாற்றில், தந்தை, மகன், சட்டமன்ற உறுப்பினராக, எம்.பி.யாக இருப்பதை மக்கள் பார்த்திருக்கிறார்கள். தற்போது முதல்வர் பினராயி விஜயனும், அவரின் மருமகன் முகமது ரியாஸும்தான் வெற்றி பெற்று ஒன்றாகச் சட்டப்பேரவைக்குள் செல்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முதல்வருமான பினராயி விஜயனின் மகள் வீணாவைத் திருமணம் செய்தவர் முகமது ரியாஸ்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தேசியத் தலைவராக முகமது ரியாஸ் உள்ளார். கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் கோழிக்கோடு மாவட்டம், பேப்பூர் தொகுதியில் போட்டியிட்ட முகமது ரியாஸ் வெற்றி பெற்றார். தர்மடம் தொகுதியில் போட்டியிட்ட பினராயி விஜயன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

In a first for Kerala, father-in-law CM and son-in-law MLA in Assembly

இதற்கு முன்னர் கேரள சட்டப்பேரவையில் கடந்த காலங்களில் தந்தை -மகன், தந்தை - மகள் எனச் சட்டப்பேரவைக்குள் சட்டமன்ற உறுப்பினர்களாக வந்துள்ளனர். ஆனால், முதல் முறையாக மாமனார், மருமகன் ஜோடியாகச் சட்டப்பேரவைக்குள் வருவது இதுதான் முதல் முறையாகும். இந்தத் தேர்தலில் தந்தை மகன், அரசியல் தலைவர்களின் நெருங்கிய உறவுகள் எனப் போட்டியிட்டாலும் அவர்களில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். மாமனார், மருமகன் ஜோடியாக யாரும் வெற்றி பெறவில்லை.

In a first for Kerala, father-in-law CM and son-in-law MLA in Assembly

கேரள காங்கிரஸ் தலைவர் பி.ஜே.ஜோஸப் தொடுபுழாவில் போட்டியிட்டார். அவரின் மருமகன் ஜோசப், கொத்தமங்களம் தொகுதியில் போட்டியிட்டார். இருவருமே தோற்றுப்போனார்கள். காங்கிரஸ் தலைவர்கள் கே.முரளிதரன் நீமம் தொகுதியிலும், பத்மஜா வேணுகோபால் திருச்சூர் தொகுதியிலும் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. In a first for Kerala, father-in-law CM and son-in-law MLA in Assembly | India News.