மெடிக்கல் ஷாப்களில்... 'இந்த' மாத்திரை வாங்க மருந்து சீட்டு கட்டாயமா?... தமிழக அரசு விளக்கம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மருந்து சீட்டு கண்டிப்பாக வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.

காய்ச்சல், இருமல், சளி ஆகியவை கொரோனா அறிகுறிகளாக உள்ளதால் லேசாக உடம்பு சுட்டாலும் மனதில் சிறு அச்சம் தோன்றி விடுகிறது. இதனால் மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
இந்த நிலையில் காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் பாரசிட்டமால் மாத்திரை வாங்க மருந்து சீட்டு கண்டிப்பாக வேண்டும் என்றும் மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் பாரசிட்டமால் வழங்கப்படாது எனவும் கடந்த சில நாட்களாக தக்வல்கள் வெளியாகின.
இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்தும் பாரசிட்டமால் மாத்திரைகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்யக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
அதில் பாரசிட்டமால் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் வழங்கக்கூடாது என அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என தெரிவித்தது. இதையடுத்து அரசு தரப்பு அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தது.

மற்ற செய்திகள்
