"1 ரூபாயும் ஒரு தேங்காயும் போதும்".. 11.50 லட்ச ரூபாய் வரதட்சணையை திருப்பி கொடுத்த மணமகன்.. ஜென்டில்மேன்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனக்கு வழங்கப்பட்ட 11.50 லட்ச ரூபாய் வரதட்சணையை ஏற்க மறுத்து, ஒரு ரூபாயை மட்டும் வரதட்சணையாக பெற்றிருக்கிறார் மணமகன் ஒருவர். இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
திருமணத்தின்போது வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என சட்டம் இயற்றப்பட்டு இருந்தாலும் கள எதார்த்தம் அப்படி இல்லை. இன்னும் பல இடங்களில் வரதட்சணை காரணமாக பெண்கள் பாதிப்புகளை சந்தித்து தான் வருகின்றனர். இதனை தடுக்க, பல்வேறு விதங்களில் அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அதே வேளையில் விதிவிலக்குகளாக சிலர் வரதட்சணை வாங்குவதில்லை என கூறுவதோடு அதனை நிறைவேற்றியும் காட்டுகிறார்கள். அப்படியான ஒரு சம்பவம் தான் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
ராஜஸ்தான் மாநிலத்தின் நாகவுர் மாவட்டம் ஹுடில் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பிரேம் சிங் ஷெகாவத். இவர் தனது மகளுக்கு வரன் பார்த்து வந்திருக்கிறார். அதன்படி அமர்சிங் எனும் இளைஞரோடு தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்திருக்கிறார். ராணுவ வீரரான அமர் சிங் தற்போது உத்திராக்கன்ட் மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வந்திருக்கின்றன.
திருமண நாளன்று தாம்பூல தட்டில் 11.50 லட்ச ரூபாயை வைத்து வரதட்சணையாக பிரேம் சிங் தனது மருமகன் அமர் சிங்கிற்கு கொடுத்திருக்கிறார். அப்போது, அதனை வாங்க மறுத்த அமர் சிங், தனக்கு ஒரு ரூபாய் மற்றும் ஒரு தேங்காய் மட்டும் போதும் என சொல்லியிருக்கிறார். அதன்படி அமர் சிங்கின் தந்தை பன்விர் சிங் அந்த பணத்தை மீண்டும் மணமகளின் தந்தையான பிரேம் சிங்கிடம் திருப்பி கொடுத்திருக்கிறார். அமர் சிங்கின் குடும்பத்தில் மூன்று தலைமுறையினர் ராணுவ வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Images are subject to © copyright to their respective owners.
இதனை கண்டு மனம் நெகிழ்ந்துபோன பிரேம் சிங், ஆனந்த கண்ணீர் சிந்த அங்கிருந்த அனைவரும் இந்த சம்பவத்தால் நெகிழ்ந்துபோயுள்ளனர். மணமக்கள் வீட்டில் இருந்து கொடுக்கப்பட்ட 11.50 லட்ச ரூபாயை வாங்க மறுத்து ஒரு ரூபாயை மட்டும் மாப்பிள்ளை வரதட்சணையாக பெற்ற சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும், மாப்பிள்ளை அமர் சிங்கையும் பலர் பாராட்டி வருகின்றனர்.