“அவரை குறைச்சு மதிப்பிடக் கூடாது”.. எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியது பற்றி பில் கேட்ஸ் பரபரப்பு கருத்து..!
முகப்பு > செய்திகள் > உலகம்டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது குறித்து பில் கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

உலகின் முன்னணி பணக்காரரான டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்கினார். இதனைத் தொடர்ந்து தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்தார்.
டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் பேரத்தை முடிப்பதற்காக டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை எலான் மஸ்க் விற்பனை செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வாங்கியது குறித்தும் அந்த நிறுவனத்தின் எதிர்காலம் குறித்தும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும் உலக கோடீஸ்வரர்களின் ஒருவருமான பில் கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய பில் கேட்ஸ், ‘எலான் மஸ்க் உண்மையில் டுவிட்டரை இன்னும் மோசமாக்க முடியும். ஆனால் அவர் என்ன செய்யப் போகிறார் என்பது பற்றி எனக்கு தெளிவாக தெரியவில்லை. அதே நேரத்தில் அவரது மற்ற நிறுவனங்களின் (டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ்) சாதனை அற்புதமாக உள்ளது. அந்த நிறுவனங்களில் சிறந்த பொறியாளர்கள் குழுவை ஒன்றிணைத்து மஸ்க் சிறப்பாக செயல்ப்பட்டுள்ளார் என்று நான் நம்புகிறேன்.
ஆனால் டுவிட்டர் நிறுவனத்திலும் அவரால் அதை செய்ய முடியுமா என்று எனக்கு சந்தேகம் உள்ளது. ஆனால் அவரை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது’ என்று பில் கேட்ஸ் கூறியுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/

மற்ற செய்திகள்
