“சாதாரண பயனர்களுக்கு டுவிட்டர் இலவசம்தான், ஆனால்...!” திடீரென ‘ட்விஸ்ட்’ வச்ச எலான் மஸ்க்..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்டுவிட்டர் குறித்து எலான் மஸ்க் பதிவிட்டுள்ள டுவீட் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

Also Read | சிக்னல் போட்டும் கிளம்பாமல் நின்ற ரயில்.. “என்ன டிரைவரை காணோம்?”.. கடைசியில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்..!
உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் போன்று நிறுவனங்களில் நிறுவனரான எலான் மஸ்க், 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டர் நிறுவனத்தை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார். அதனால் இனி டுவிட்டரில் பல மாற்றம் வர வாய்ப்புள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் எலான் மஸ்க் பதிவிட்டுள்ள டுவீட் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில், ‘டுவிட்டர் சாதாரண பயனர்களுக்கு எப்போதும் இலவசமாகவே இருக்கும். ஆனால் வர்த்தக ரீதியாக அல்லது அரசு சார்ந்து டுவிட்டரைப் பயன்படுத்துவோருக்கு கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது’ என பதிவிட்டுள்ளார்.
கடந்த மாதம், டுவிட்டர் தளத்தில் சூறாவளி மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார். மேலும் டுவிட்டரில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் கூறி வருகிறார். குறிப்பாக எடிட் பட்டன், அனைவருக்கும் வெரிஃபிகேஷன் என பல விஷயங்களைப் பேசியுள்ளார். அதேபோல் டுவிட்டர் ப்ளூ ப்ரீமியம் சந்தா சேவைக் கட்டணத்தைக் குறைப்பதைப் பற்றியும் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய எலான் மஸ்க், ‘டுவீட்கள் எப்படி புரோமோட் அல்லது டிமோட் செய்யப்படுகின்றன என்ற மென்பொருள் பற்றி பொதுவெளியில் விமர்சனத்துக்கு விட வேண்டும்’ என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.Twitter will always be free for casual users, but maybe a slight cost for commercial/government users
— Elon Musk (@elonmusk) May 3, 2022
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
