“இப்படி நடக்கும்னு கற்பனைல கூட நான் நெனக்கல”.. திடீரென முக்கிய அதிகாரிகளை பணி நீக்கம் செய்த TWITTER CEO..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்டுவிட்டர் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். இந்த சூழலில் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், இரண்டு முக்கிய நிர்வாகிகளான தயாரிப்பு தலைவர் கேவோன் பெய்க்பூர் மற்றும் வருவாய் பொது மேலாளர் புரூஸ் ஃபலாக் ஆகியோரை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள கேவோன் பெய்க்பூர், ‘7 ஆண்டுகளுக்குப் பிறகு டுவிட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறேன். உண்மை என்னவென்றால், டுவிட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேறுவது குறித்து நான் கற்பனை செய்துகூட பார்த்ததில்லை. இது என்னுடைய முடிவு அல்ல. பராக் டுவிட்டரை வேறு திசையில் கொண்டு செல்ல விரும்புவதாக என்னிடம் கூறினார். அதன்பின்னர் என்னை வெளியேறும்படி கேட்டுக் கொண்டார்.
இதனால் நான் ஏமாற்றமடைந்தாலும், சில விஷயங்களில் ஆறுதல் அடைகிறேன். கடந்த சில ஆண்டுகளாக எங்கள் கூட்டுக் குழு என்ன சாதித்திருக்கிறது என்பதையும், இந்தப் பயணத்தில் என்னுடைய சொந்த பங்களிப்பையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்’ என்று தெரிவித்தார்.
The truth is that this isn’t how and when I imagined leaving Twitter, and this wasn’t my decision. Parag asked me to leave after letting me know that he wants to take the team in a different direction.
— Kayvon Beykpour (@kayvz) May 12, 2022
அதேபோல் வருவாய் பொது மேலாளராக பணியாறிய புரூஸ் ஃபலாக் தான் வேலையில் இருந்து அகற்றப்பட்டதை டுவிட்டரில் பதிவிட்டார். பின்னர் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார். ஆனாலும் ‘வேலையற்றவர்’ (Unemployed) என தனது டுவிட்டர் பயோவில் மாற்றம் செய்துகொண்டார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8