"'ஜஸ்ட் மிஸ்',,.. அந்த ஒரு 'BALL' மிஸ் பண்ணதுக்கு ரொம்ப நன்றி"... பிரபல 'கிரிக்கெட்' வீரரின் வைரல் 'ட்வீட்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Sep 28, 2020 05:03 PM

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

yuvraj singh wishes rahul tewatia and rajasthan royals

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி அணியின் வெற்றிக்கு வழி செய்தார். அதே போல, தொடக்கத்தில் தடுமாறிய ராகுல் டெவாட்டியா, இறுதியில் ஒரே ஒவரில் ஐந்து சிக்ஸர்களை பறக்க விட்டார். இதனால் இறுதி 2 ஓவர்களில் ராஜஸ்தான் அணியின் வெற்றி இலக்கு எளிதானது.

முதலில் அவர் பந்துகளை வீணடித்த போது, ஐபிஎல் ரசிகர்கள் அவர் பேட்டிங்கை குறை கூறினர். திடீரென அவர் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தனது பேட் மூலம் தன்னை விமர்சித்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்தார். ராகுல் டெவாட்டியாவின் பேட்டிங்கிற்கு கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், ராகுல் டெவாட்டியா பேட்டிங் குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், டெவாட்டியாவிற்கு வாழ்த்துக்களை பகிர்ந்த யுவராஜ் சிங், ராஜஸ்தான் அணியின் சாதனை வெற்றிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதே போல, தனது டீவீட்டில் ஐந்து சிக்ஸர்கள் அடித்த ஓவரில் ஒரு பந்தை ராகுல் டெவாட்டியா தவற விட்டார். அதற்கு நன்றி என்றும் யுவராஜ் சிங் குறிப்பிட்டார்.

அதற்கு காரணம், யுவராஜ் சிங் முதல் டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பிராட் வீசிய ஓவரில் 6 பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பியிருந்தார். அதனை குறிப்பிட்டு தனது டீவீட்டில் யுவராஜ் சிங் காமெடியாக நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Yuvraj singh wishes rahul tewatia and rajasthan royals | Sports News.