திடீரென தரைமட்டமான அடுக்குமாடி கட்டிடம்.. பதறிப்போன மக்கள்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Mar 09, 2023 04:21 PM

டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் திடீரென சரிந்து விழுந்த சம்பவம் மொத்த டெல்லியையும் அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது.

Delhi Multi Storey Building Collapses on Road Video goes viral

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | மகள்களுக்காக 29 வருஷம் கழிச்சு மறுபடியும் திருமணம் செய்துகொண்ட தம்பதி.. பின்னணி என்ன?

அடுக்குமாடி கட்டிடம்

டெல்லியின் பஜன்புரா பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்று திடீரென சரிந்து தரைமட்டமாகியுள்ளது. இதனால் அருகில் வசித்து வந்த குடியிருப்பாளர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்த கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் இந்த விபத்தினால் அந்த பகுதியே ஸ்தம்பித்து போயிருக்கிறது. நேற்று மதியம் 3.05 மணிக்கு இந்த கட்டிடம் சரிந்து விழுந்ததாக காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

தகவல்

கட்டிடம் சரிந்து விழுந்த உடனேயே இதுகுறித்து காவல் துறைக்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் அப்பகுதியில் அமைந்திருந்த குடியிருப்பாளர்களை பத்திரமான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

Delhi Multi Storey Building Collapses on Road Video goes viral

Images are subject to © copyright to their respective owners.

இது குறித்து பேசியுள்ள காவல் துறை அதிகாரிகள்," இந்த சம்பவம் குறித்து மதியம் 3.05 மணிக்கு தகவல் கிடைத்தது.இதனை தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். மீட்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது" என்றனர்.

வீடியோ

அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழும் போது அங்கிருந்த சிலர் இதனை வீடியோ எடுத்திருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்த விபத்து காரணமாக யாரேனும் காயமடைந்துள்ளார்களா? என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Delhi Multi Storey Building Collapses on Road Video goes viral

Images are subject to © copyright to their respective owners.

முன்னதாக மார்ச் 1 ஆம் தேதி, வடக்கு டெல்லியின் ரோஷனாரா சாலையில் தீப்பிடித்து நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது, ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். இருப்பினும் இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். இந்நிலையில்  பஜன்புரா பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்று தரைமட்டமான சம்பவம் டெல்லி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | "அவருக்கு எல்லா பந்தும் அவுட் மாதிரியே தெரியும்".. ஜடேஜாவை கலாய்த்த ரோஹித் ஷர்மா 😅..!

Tags : #DELHI #DELHI MULTI STOREY BUILDING COLLAPSES #BUILDING COLLAPSES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Delhi Multi Storey Building Collapses on Road Video goes viral | India News.