'அந்த' பண்டிகைக்குள்ள 70,000-த்த தாண்டிரும்... 'ஷாக்' கொடுக்கும் அறிக்கை... அப்போ இனி வெலை கொறையாதா?
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது 10 கிராம் தங்கம் ரூபாய் 57,665 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஜேபி மார்கன் அறிக்கையின்படி வருகின்ற தீபாவளி பண்டிகைக்குள் 10 கிராம் தங்கத்தின் விலை 70,000 ஆயிரம் ரூபாயை தாண்டலாம் என கூறப்படுகிறது.
சென்னையை பொறுத்தவரை தற்போது 1 கிராம் தங்கம் 5381 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 43,048 என்றளவில் விற்பனையாகிறது. இதேபோல வெள்ளி விலையும் தொடர்ந்து எகிறி வருகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 74.21 ரூபாயாகவும், கிலோ 74,210 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நெருக்கடியான இந்த காலகட்டத்தில் மக்கள் தங்கள் முதலீடுகளை தங்கம் நோக்கி திருப்பியதும் தங்கத்தின் மீதான விலை தொடர்ந்து உயர ஒரு காரணமாக உள்ளது. இதனால் தற்போதைய சூழலில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.