Battery
The Legend
Maha others

WEEKEND'ல RAPIDO பைக் ஓட்டும் ஐடி ஊழியர்.. அவர் சொன்ன காரணம் கேட்டு.. மெர்சலான நெட்டிசன்கள்.. "ப்பா, எவ்ளோ பெரிய மனசு!!"

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Jul 26, 2022 11:28 PM

இன்றைய காலகட்டத்தில், நகரப் பகுதிகளில் பெரும்பாலான மக்கள்,ஓலா, உபேர், ராபிடோ உள்ளிட்ட கேப் நிறுவனங்களின் சேவைகளை பயன்படுத்தி, தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

bengaluru techie works as rapido driver reason surprise people

அந்த வகையில், இளைஞர் ஒருவர், Rapido மூலம் பைக் ஒன்றை புக் செய்து பயணம் மேற்கொண்ட நிலையில், தனது பயணம் பற்றி அவர் பதிவிட்ட ட்வீட் ஒன்று, தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.

இது தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ள ட்வீட்டின் படி, அந்த நபரின் பெயர் நிகில் சேத் என்பது தெரிய வருகிறது.

மேலும், பெங்களூரு பகுதியைச் சேர்ந்த அந்த நபர், Rapido மூலம் தனக்கு செல்ல வேண்டிய இடத்திற்கு பைக் ஒன்றையும் புக் செய்துள்ளார். வழக்கமாக, இது போன்று வாகன சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், சில நேரம் அந்த ஓட்டுநர்களுடன் ஏதாவது பேசிக் கொண்டே வருவார்கள். அப்படி இந்த ட்விட்டர்வாசியான நிகில் என்பவரும், தான் புக் செய்த பைக்கின் ஓட்டுநருடன் பேச முற்பட்டுள்ளார்.

அப்போது, அவருக்கு இரண்டு ஆச்சரியங்கள் காத்திருந்தது. அதாவது அந்த வாகன ஓட்டுனர் முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்ட்டில், சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார் என்பது தான் முதல் ஆச்சரியமான செய்தி. பெங்களூர், சென்னை உள்ளிட்ட பல நகர பகுதிகளில், இது போன்று மற்ற வேலை செய்யும் நபர்கள், பார்ட் டைமாகவும் வாகனம் ஓட்டி பணம் சம்பாதிப்பார்கள்.

ஆனால், வாகனம் ஓட்ட ஏதாவது காரணம் இருக்கிறதா என நிகில் கேட்க, அந்த வாகனம் ஓட்டி வந்த நபர் சொன்ன பதில், நிகிலுக்கு இரண்டாவது ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. அது மட்டுமில்லாமல், இணையத்தில் பலரும் இந்த பதிலால் நெகிழ்ந்து போயுள்ளனர். அதாவது, வார இறுதியில் மக்களுடன் பேச வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில், பொழுது போக்காக தான் வாகனம் ஓட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

bengaluru techie works as rapido driver reason surprise people

இதனை நெகிழ்ந்து போய், நிகில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட, நெட்டிசன்களும் ஹார்ட்டுகளை அள்ளிக் கொடுத்து வருகின்றனர். இன்றைய காலத்தில் பலரும், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் நிலையில், மக்களிடம் பேசுவதற்காக வார இறுதியில் வாகனம் ஓட்டுவதாக சாஃப்ட்வேர் இன்ஜினியர் சொன்ன தகவல் தான், தற்போது இணையத்தில் ஹைலைட்டான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Tags : #RAPIDO #SOFTWARE ENGINEER #IT EMPLOYEE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bengaluru techie works as rapido driver reason surprise people | India News.