"இதுவர '400' உடல்கள தகனம் செஞ்சுட்டேன் ... என்னால முடியல..." - 'கொரோனா' பணியாளர் சொல்லும் பகீர் 'அனுபவம்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகம் முழுவதும் கொரோனா தொற்று கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவிலும் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை தகனம் செய்ய குடும்பத்தினருக்கு அனுமதி இல்லாத நிலையில், அவர்களை தகனம் செய்ய பலர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். அசாம் மாநிலம் கவுகாத்தியில் கொரோனா நோயாளிகளின் உடல்களை தகனம் செய்து வரும் 43 வயதான ராமானந்தா சர்கார் என்பவர் தனது பணி குறித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
'கடந்த ஏப்ரல் மாதம் முதல் நான் இந்த பணியை மேற்கொண்டு வருகிறேன். ஆரம்பத்தில் நாள் ஒன்றிற்கு 1 - 2 உடல்களை மட்டுமே எடுத்து வருவார்கள். ஆனால் தற்போது நாளொன்றுக்கு பத்திற்கும் மேற்பட்ட உடலங்களை தகனம் செய்ய வேண்டியிருக்கிறது. இரவு, பகல் பாராமல் பணிபுரிந்து வருகிறோம். நான் மிகவும் சோர்வடைந்து விட்டேன்' என்றார்.
மேலும், 'தொடக்கத்தில் கொரோனா நோயாளிகளின் உடலை புதைக்கும் போது சற்று பயம் இருந்தது. ஆனால், இப்போது அந்த பயம் இல்லை. இதுவரை எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை' என தெரிவித்தார். ராமானந்தா சர்கார், இதுவரை 400 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளை தகனம் செய்துள்ளார்.
கடந்த சில நாட்களாக அசாம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், உடல்களை தகனம் செய்யும் இடங்களிலும் பிரச்சனை ஏற்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், உடல்களை அடக்கம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

மற்ற செய்திகள்
