"சொல்லவே இல்ல?".. பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் .. இருந்து நீக்கப்பட்ட புத்தகம்.. அருந்ததி ராய் ‘வைரல்’ ரியாக்‌ஷன்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Nov 13, 2020 02:18 PM

எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய, “தோழர்களுடன் ஒரு பயணம்”(Walking with the comrades) என்ற புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முதுகலை ஆங்கிலம் பாடத்திட்டத்தில்,பாடமாக வைக்கப்பட்டிருந்தது.

Arundhati Roy statement over Maoist Book in University lesson

கடந்த 2017 ஆம் ஆண்டு முதுகலை ஆங்கிலம் 3வது செமஸ்டருக்கான பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட இந்த புத்தகத்தில், மாவோயிஸ்டுகளின் செயல்களை நியாயப்படுத்தும் கருத்துகள் இடம்பெற்றிருப்பதாக இதற்கு ஏ.பி.வி.பி. அமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பல்வேறு அரசியல் தலைவர்களும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற நிலையில் எழுத்தாளர், இதுபற்றி பேசிய அருந்ததி ராய், தனது புத்தகம் இத்தனை ஆண்டுகளாக பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்ததே தனக்கு தெரியாது என்றும், அதனால் அதிர்ச்சி, ஆச்சரியம் என எதுவும் தனக்கு உண்டாகவில்லை என்றும், இத்தனை ஆண்டுகளாக மாணவர்களுக்கு பாடமாக தனது புத்தகம் கற்பிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒரு எழுத்தாளராக எழுதுவது மட்டுமே தமது கடமை என்றும் பாடத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக போராடுவது தமது கடமை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Arundhati Roy statement over Maoist Book in University lesson | India News.