ஆனந்த் மஹிந்திராவுக்கு அமெரிக்காவில் கிடைத்த கவுரவம்.. நெகிழ்ச்சியில் போட்ட ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திராவுக்கு அமெரிக்க கல்லூரி ஒன்று விருது வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.
ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
விருது
அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான கல்வி நிலையம் Fletcher School of Law and Diplomacy ஆகும். அமெரிக்காவில் உள்ள சர்வதேச விவகாரங்களுக்கான கல்வி நிலையங்களில் இந்த கல்லூரி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இங்கு முனைவர் பட்டம் பெறுவதை பலரும் கவுரவமாக கருதுகின்றனர்.
இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திராவின் தந்தை ஹரிஷ் மஹிந்திரா தான் இந்த கல்லூரியில் படித்த முதல் இந்தியர் ஆவார். இதனை பெருமைப்படுத்தும் விதமாக, ஆனந்த் மஹிந்திராவுக்கு விருது அளித்துள்ளது கல்லூரி நிர்வாகம்.
ட்வீட்
இந்நிலையில், ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில்," 75 ஆண்டுகளுக்கு முன்பாக பாஸ்டனில் முதல் இந்தியராக எனது தந்தை பட்டம் பெற்றார். இந்நிலையில், இந்தியாவின் 75 வது சுதந்திர ஆண்டில் இந்த கல்லூரியின் Class Day-வில் கலந்துகொண்டு டீன் மெடலை பெற்றேன். எனது தந்தைக்கு பதிலாக நான் இதை பெற்றிருப்பதாக கருதுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனந்த் மஹிந்திராவின் இந்த ட்வீட் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த பதிவில்,"நீங்கள் பேசிய வீடியோவை பதிவிடுங்கள்" எனவும் பெருமைமிகு தருணம்" என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
Also Read | "பயமா இருக்குப்பா..!"... இந்தியாவையே உலுக்கிய "விஸ்மயா" வழக்கு கடந்து வந்த பாதை.!