"10,000 ரூபாய்க்கு காரா?.. நாங்க ஏற்கனவே பண்ணிட்டோமே.." நெட்டிசன் கேள்விக்கு ஆனந்த் மஹிந்திராவின் வைரல் பதில்
முகப்பு > செய்திகள் > இந்தியாமஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, தன்னுடைய தொழில் ரீதியான பணிகளில் அதிகம் மும்முரமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் சமூக வலைத்தளங்களிலும் அதிகம் ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.
இணையத்தில் தான் அதிகம் கவனிக்கும் வேடிக்கையான வீடியோக்களையும், அதே போல நிறைய திறமைகளை கொண்டு, புதியதாக படைப்புகளை உருவாக்கும் நபர்களின் செய்தி குறித்த பதிவுகளையும் பகிர்ந்து பாராட்டுக்களை கொடுப்பார்.
பாராட்டுவதோடு மட்டும் ஆனந்த் மஹிந்திரா நிறுத்தி விடாமல், சில மனிதர்களுக்கான அங்கீகாரத்தை கொடுக்கவும் ஆனந்த் மஹிந்திரா தவறுவதில்லை.
ஆக்டிவாக இருக்கும் ஆனந்த் மஹிந்திரா
இப்படி, முழுக்க முழுக்க தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு, அதிகம் அப்டேட்களுடன் இருக்கக் கூடியவர் ஆனந்த் மஹிந்திரா. சமீபத்தில் கூட, 3 சக்கர வாகனம் ஒன்றை சொந்தமாக உருவாக்கி, அதன் மூலம் பால் விநியோகம் செய்த நபரின் வீடியோ ஒன்றை பகிர்ந்து, பாராட்டுக்களைத் தெரிவித்து, அந்த நபரை சந்திக்க விரும்புவதாகவும் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்திருந்தார்.
நெட்டிசன்கள் கேள்வி..
அதே போல, ஒரு ரூபாய்க்கு கடந்த 30 வருடங்களாக இட்லி விற்பனை செய்து வரும் தமிழகத்தை சேர்ந்த செல்லாத்தாள் என்ற மூதாட்டிக்கு வீடு ஒன்றையும் மஹிந்திரா குழுமம் பரிசாக, அன்னையர் தினத்தன்று வழங்கி இருந்தது. இப்படி, ஆனந்த் மஹிந்திராவின் செயல்பாடுகள் எப்போதும் பேசு பொருளாக இருக்க, தற்போது அவர் செய்துள்ள ட்வீட் ஒன்றும் அதிகம் வைரலாகி வருகிறது.
1,500 ரூபாய்க்கே விக்குறோம்..
நெட்டிசன் ஒருவர், ஆனந்த் மஹிந்திராவின் ட்வீட்டில் கமெண்ட் ஒன்றை செய்திருந்தார். அதில், "10 ஆயிரம் ரூபாய்க்குள் மஹிந்திரா கார்களை உங்களால் உருவாக்க முடியுமா?" என்ற கேள்வியை எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளித்த ஆனந்த் மஹிந்திரா, "நீங்கள் கேட்டதை விட, நாங்கள் சிறப்பாக செய்துள்ளோம். 1,500 ரூபாய்க்கு கீழ் உருவாக்கி உள்ளோம்" என குறிப்பிட்டு, ஆன்லைனில் விற்கப்படும் மஹிந்திரா தார் பொம்மை கார்களின் புகைப்படம் ஒன்றையும் இணைத்துள்ளார்.
மிகவும் ஜாலியாக நெட்டிசன் ஒருவருக்கு ஆனந்த் மஹிந்திரா கொடுத்துள்ள பதில், தற்போது மக்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8