முழங்கால் அளவு 'பனியில்' சிக்கிக்கொண்ட வீரர்கள்... தீவிரவாதிகளின் 'திடீர்' தாக்குதலால் வீர மரணம்... வைரலாகும் 'கடைசி' புகைப்படம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Apr 08, 2020 10:34 PM

பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய வீரர்கள் 5 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர்.

5 Indian Army Soldiers killed in Kashmir\'s Kupwara

உலகம் முழுவதும் கொரோனா பிடியில் சிக்கி இருக்கும் இந்த சூழ்நிலையிலும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது காஷ்மீரின் குப்வாரா பகுதியில் அதிக பனிமூட்டம் நிலவி வருகிறது. இதைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 1-ம் தேதி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர். கால் தடங்களை வைத்து தீவிரவாதிகளின் ஊடுருவலை கண்டறிந்த இந்திய ராணுவம் ட்ரோன் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் பணியை மேற்கொள்ளும் `ரந்தோரி பீஹக்' என்ற ஆபரேஷனைத் திட்டமிட்டது.

இதற்காக சிறப்பு ராணுவப்படையை சேர்ந்த சுபேதர் சஞ்சீவ் குமார், பால கிருஷ்ணன், அமித் குமார், சத்ரபால் சிங், தேவேந்திர சிங் ஆகிய வீரர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் காஷ்மீரின் குப்வாரா பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படமே அவர்கள் வாழ்வின் கடைசி புகைப்படமாகி இருக்கிறது.  அங்கிருந்த பாறை ஒன்றில் 2 வீரர்கள் ஏறி நின்று தேடுதல் பணியை தொடங்கி உள்ளனர். அப்போது பாறை திடீரென உடைந்து விழுந்து அங்கிருந்த ஏரிக்குள் விழுந்து விட்டனர்.

அவர்களை காப்பாற்ற மீதமுள்ள வீரர்கள் சென்றபோது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது நடந்த சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்திய வீரர்கள் நான்கு பேரும் இப்போரில் இறந்ததாக ராணுவ உயரதிகாரி ராஜு தெரிவித்து இருக்கிறார். மேலும் மற்றொரு வீரரும் மருத்துவமனையில் உயிரிழந்ததாக தெரிவித்த அவர், உரிய முறையில் அவர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.