உங்க கம்பெனியில ஒரு JOB கிடைக்குமா...? 'கம்பெனியில இருந்து மெயில்ல வந்த ஒரு லெட்டர்...' - லெட்டர பார்த்துட்டு பல மணி நேரமா அழுத பெண்மணி...!
முகப்பு > செய்திகள் > வணிகம்வேலைக்காக விண்ணப்பித்த பெண் ஒருவருக்கு அந்த நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சலால் மனவருத்தம் அடைந்து அழுததாக தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கிரண் என்னும் பெண்மணி பிரபல நிறுவனத்தில் பணிக்கு விண்ணப்பித்துள்ளார், அந்த நிறுவனத்தில் இருந்து அவருக்கு பதில் மின்னஞ்சலும் அனுப்பியுள்ளனர்.
அதில், 'உங்களால் முடிந்தவரை தொடர்ந்து வேலைக்காக முயலுங்கள். இந்த நிராகரிப்புகளை களைய ஒரு 'ஆம்' மட்டுமே வேண்டும். ஆனால் அந்த 'ஆம்' தற்போது எங்களின் நிறுவனத்தில் இருந்து கொடுக்க முடியவில்லை.
உங்களுக்கான கனவுகளை அடைய நிராகரிப்பிலிருந்து பாடம் கற்று முன்னேறிய ஆறு எடுத்துக்காட்டுகளை தருகிறோம் என ஆறு பேரின் முன்னேற்றம் குறித்த குறிப்பை அனுபியுள்ளனர். மேலும், எங்களின் இந்த நிராகரிப்பு உங்களின் அடுத்த பெரிய 'ஆம்' க்கான படியாக இருக்கட்டும்.
இந்த மின்னஞ்சல்கள் அடங்கிய ஸ்கிரீன்ஷூட்களை தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்ட அந்த பெண்மணி இந்த கடிதத்தை பார்த்து பலமணி நேரம் அழுததாக கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
