இந்தியாவுல எப்போ டெஸ்லா, ஸ்டார்லிங் வரும்?.. எலான் மஸ்க் சொன்ன பதில்.. அதிர்ந்துபோன நெட்டிசன்கள்..வைரல் ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங் திட்டங்கள் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற கேள்விக்கு எலான் மஸ்க் அளித்திருக்கும் பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எலான் மஸ்க்
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். பின்னர் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்திருந்த வேளையில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அந்த நிறுவனத்தை முழுவதுமாக வாங்கியுள்ளார் மஸ்க்.
கேள்வி
உலகத்தின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்கிடம்," ஸ்டார்லிங் திட்டம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? என ட்விட்டரில் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்திருக்கும் மஸ்க்,"அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
உலகம் முழுவதும் குறைவான கட்டணத்தில் அதிவேக இணையசேவையை அளிப்பதே ஸ்டார்லிங் திட்டமாகும். இதற்காக 2000 செயற்கைகோள்களை விண்ணில் ஏவும் திட்டத்தை செயல்படுத்திவருகிறது எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.
டெஸ்லா எப்போ?
இதே பதிவில் இந்தியாவில் டெஸ்லா கார் தயாரிப்பு தொழிற்சாலைகள் எதிர்காலத்தில் அமைக்கப்படுமா? எனக் கேள்வியெழுப்பியிருந்தார் ஒருவர். இதற்கு எலான் மஸ்க்,"டெஸ்லா கார் விற்பனை மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்காத எந்த இடத்திலும் கார் தயாரிப்பு தொழிற்சாலைகள் அமைக்கப்படாது" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில்," எலான் மஸ்க்கை இந்தியாவிற்கு வரவேற்கிறோம். ஆனால், சீனாவில் காரை தயாரித்து அதனை இந்தியாவில் விற்பனை செய்வது இந்தியாவிற்கு பலனளிக்காது. இந்தியாவில் கார் தொழிற்சாலைகளை அமைக்க மஸ்க் முன்வரவேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கார் விற்பனையை அனுமதிக்காத பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்கப்படாது என எலான் மஸ்க் தெரிவித்திருப்பது, வைரலாக பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
