"14 வயசுலயே அந்த கம்பெனி ஷேர் -அ வாங்க சொன்ன".. எலான் மஸ்கின் அம்மா பகிர்ந்த தகவல்.. மனுஷன் அப்போவே அப்படித்தான் போலயே..!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Madhavan P | May 02, 2022 08:58 AM

உலக பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் குறித்து அவருடைய தாயார் போட்ட ட்வீட் குறித்து தற்போது பலரும் வியப்புடன் பேசிவருகின்றனர்.

You told me to buy this stock says Elon Musk Mom Meye Musk

எலான் மஸ்க்

அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். பின்னர் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்திருந்த வேளையில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அந்த நிறுவனத்தை முழுவதுமாக வாங்கியுள்ளார் மஸ்க்.

You told me to buy this stock says Elon Musk Mom Meye Musk

பங்குச் சந்தை டிப்ஸ்

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதற்கு பிறகும் தொடர்ந்து தனது எண்ணவோட்டங்களை முன்பைப்போலவே ட்வீட் மூலமாக தெரிவித்துவருகிறார் மஸ்க். அந்த வகையில், நேற்று தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறித்து மஸ்க் பதிவு ஒன்றை எழுதி உள்ளார். அதில்," என்னிடம் பலமுறை கேட்கப்படுவதால் இதை மீண்டும் சொல்கிறேன். பல நிறுவனங்களில் முதலீடு செய்யவேண்டும். அந்த நிறுவனங்களின் பொருட்கள் மற்றும் சேவைகள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். அவற்றின் பொருட்கள் மற்றும் சேவை சரியானதாக இல்லை என்றால் அந்த பங்குகளை விற்றுவிடுங்கள். மார்க்கெட் நிலவரத்தை கண்டு அச்சம் கொள்ள கூடாது. இது நீண்டநாள் முதலீடாக அமைந்து பல்வேறு நன்மைகளை உங்களுக்கு அளிக்கும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

You told me to buy this stock says Elon Musk Mom Meye Musk

14 வயசுலயே

இந்நிலையில் எலான் மஸ்கின் தாயாரும் பிரபல எழுத்தாளருமான மேயி மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் எலானின் பங்குச்சந்தை குறித்த பதிவில் கமெண்ட் செய்திருக்கிறார். அதில்," உன்னுடைய 14 வயதில் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும்படி கூறினாய். ஆனால், பங்குச்சந்தை நிபுணராக இருந்த இருக்கும் நண்பர் ஒருவர் வேண்டாம் என்றார். அதனால் 1000 டாலர் மதிப்பிலான பங்குகளை வாங்கினேன். அது ஒருகட்டத்தில் வீழ்ச்சியை சந்தித்தபோது பயம் காரணமாக விற்றுவிட்டேன். ஆனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார்.

You told me to buy this stock says Elon Musk Mom Meye Musk

மேலும், முதன்முதலில் தான் வாங்கிய ஷேர் வீழ்ச்சியை சந்தித்ததால் அதனை மஸ்கின் பெயரில் மாற்றியதாகவும் பின்னர் அதுவே மஸ்க் கனடா செல்ல உதவியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக பணக்காரரான மஸ்க் தன்னுடைய 14 வயதிலேயே ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யும்படி தனது தாய்க்கு அட்வைஸ் செய்தது குறித்து பலரும் ஆச்சர்யத்துடன் பேசிவருகின்றனர்.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

Tags : #ELONMUSK #MEYEMUSK #SHAREMARKET #எலான்மஸ்க் #பங்குச்சந்தை #மேயிமஸ்க்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. You told me to buy this stock says Elon Musk Mom Meye Musk | Business News.