"நான் ஒன்னும் ஆண்ட்ராய்ட் இல்ல..எனக்கும் உணர்ச்சிகள் இருக்கு".. எலான் மஸ்க் சோகத்தோட சொன்ன விஷயம்.. என்ன ஆச்சு?
முகப்பு > செய்திகள் > உலகம்உலக பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் தனக்கும் உணர்ச்சிகள் இருப்பதாகவும் தான் ஒன்றும் ஆண்ட்ராய்ட் இல்லை எனவும் தெரிவித்திருப்பது உலக அளவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

எலான் மஸ்க்
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். பின்னர் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்திருந்த வேளையில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அந்த நிறுவனத்தை முழுவதுமாக வாங்கியுள்ளார் மஸ்க்.
மெட் கலா 2022
இந்நிலையில் எலான் மஸ்க் தனது தாயார் மேயி மஸ்க் உடன் இணைந்து பிரபல ஆடை அணிவகுப்பு கண்காட்சியான மெட் கலாவில் கலந்துகொண்டார். அப்போது வினோதமான போஸ்களை அள்ளி வழங்கிய மஸ்க், பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். எதிர்மைறையான கமெண்ட்கள் உங்களை காயப்படுத்துமா? என மஸ்கிடம் ஒருவர் கேட்க, அதற்கு பதிலளித்த அவர்," நானும் மனிதன் தான். எனக்கும் உணர்ச்சிகள் உண்டு. நான் ஒன்றும் ஆண்ட்ராய்ட் கிடையாது. நெகட்டிவ் கமெண்ட்ஸ் என்னை பாதிக்கும்" என்றார்.
தன்னை குறித்து ஆன்லைனில் பகிரப்படும் கிண்டல்கள் குறித்து பேசிய அவர்," என்னை ட்ரோல் செய்வதை பார்க்கும்போது அதனை பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு முன்னேற நினைப்பேன்" என்றார்.
பாதை
தன்னுடைய நோக்கங்கள் பெரும்பாலும் பெரிய நன்மையை நோக்கிச் செயல்படுவதைத் தவிர வேறு ஏதோவொன்றாக இழிவுபடுத்தப்படுகின்றன எனக் கூறிய மஸ்க்,"நரகத்திற்கான பாதை நல்ல நோக்கத்துடன் அமைக்கப்பட்டது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அது பெரும்பாலும் கெட்ட எண்ணங்களால் அமைக்கப்பட்டது என்று நான் நினைக்கிறேன். நல்ல எண்ணங்களால் அமைக்கப்பட்ட பாதை நிச்சயம் நரகத்திற்கு செல்லும் பாதையாக இருக்காது" என்றார்.
மேலும், இணையத்தில் கிண்டல் செய்யும் குழுக்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை பகிரும் போட் குழுக்கள் பற்றி மஸ்க் பேசுகையில்,"இது வெளிப்படையாக பயனர் அனுபவத்தை குறைக்கிறது. மக்கள் தங்கள் பணத்தை இழப்பது போன்ற விஷயத்தையும் நாங்கள் விரும்பவில்லை. எனவே, நான் நிச்சயமாக போர்ப்பாதையில் இருக்கிறேன். எனவே யாராவது ஒரு போட் மற்றும் ட்ரோல் ஆர்மியை இயக்கினால், நான் நிச்சயமாக அவர்களின் எதிரி" என்றார்.
உலகத்தின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தானும் மனிதன் தான் தனக்கும் உணர்ச்சிகள் இருக்கின்றன எனப் பேசியிருப்பது தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
