"எல்லாரும் என்ன பட்லர் 'WIFE'ன்னு நெனச்சுட்டாங்க, ஆனா.." பிரபல வீரரின் மனைவி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
முகப்பு > செய்திகள் > விளையாட்டு15 ஆவது ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இறுதி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள், நாளை (29.05.2022) மோதவுள்ளது.
முன்னதாக, முதல் குவாலிஃபயர் போட்டியில், ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் தான் மோதி இருந்தது. இதில், வெற்றி பெற்றிருந்த குஜராத் அணி, நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இதனைத் தொடர்ந்து, எலிமினேட்டர் போட்டியில் பெங்களூர் மற்றும் லக்னோ அணிகள் மோதி இருந்தது. இந்த போட்டியில், பெங்களூர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
தட்டித் தூக்கிய பட்லர்..
தொடர்ந்து, பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள், இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் நேற்று (27.05.2022) மோதி இருந்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்திருந்தது. இதன் பின்னர், இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி, 19 ஆவது ஓவரில் இலக்கை எட்டி இறுதி போட்டிக்கும் முன்னேற்றம் கண்டிருந்தது.
அதிலும் குறிப்பாக, ஜோஸ் பட்லர் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது நான்காவது சதத்தை பதிவு செய்து சாதனை படைத்திருந்தார். முதல் குவாலிஃபயர் போட்டியிலும் 89 ரன்கள் அடித்திருந்தார் பட்லர். நடப்பு தொடரில், மொத்தம் 4 சதங்களுடன் இதுவரை 824 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் இறுதி போட்டியிலும் அவர் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.
பிரபல வீரரின் மனைவி பகிர்ந்த சுவாரஸ்யம்
இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த பிரபல வீரரின் மனைவி, ஜோஸ் பட்லர் பற்றி தெரிவித்துள்ள கருத்து, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்க வீரரான ரசீ வாண்டர் டசன், நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் இடம்பிடித்திருந்தார். ஒரு சில போட்டிகளில் மட்டுமே அவர் களமிறங்கி இருந்த நிலையில், அவரது மனைவி லாரா, ஜோஸ் பட்லர் குறித்து சுவாரஸ்ய கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார்.
எல்லாரும் அப்டி தான் நெனச்சுட்டு இருக்காங்க..
"அனைவரும் என்னை ஜோஸ் பட்லரின் மனைவி என நினைத்துக் கொண்டனர். இதற்கு காரணம், ஜோஸ் பட்லர் ரன் அடிக்கும் போதெல்லாம் என்னை கேமராவில் அடிக்கடி காட்டியது தான் என நான் நினைக்கிறேன். நானும், தனஸ்ரீயும் (சாஹல் மனைவி) ஆட்டத்தை மிகவும் உற்சாகத்துடன் பார்ப்போம். ஜோஸ் பட்லர் சதமடிக்கும் போது நான் அதனை மகிழ்ச்சியாக கொண்டாடியதை வைத்து, பலரும் நான் தான் அவரின் மனைவி என கருதி விட்டனர்.
நான் இப்போது ஜோஸை என் இரண்டாவது கணவராக ஏற்றுக்கொண்டதாகவே கருதப்படுகிறது. எனது கணவர் வாண்டர் டசன், அதிக அளவில் ஐபிஎல் போட்டிகள் ஆடவில்லை. இதனால், அவரது ஆட்டத்தைக் கொண்டாடும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இதன் பெயரில், நான் பட்லரின் ஆட்டத்தைக் கண்டு உற்சாகம் அடைகிறேன்" என லாரா தெரிவித்துள்ளார்.