வெற்றிகரமான '10-வது' ஆண்டு; வாடிக்கையாளர்களுடன் கொண்டாடும் 'VCARE' நிறுவனம்...!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Issac | Aug 13, 2021 05:42 PM

பாண்டிச்சேரியில் சிறிய அழகு நிலையமாக தொடங்கப்பட்ட Vcare நிறுவனம் தற்போது இந்தியாவில் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.

\'Vcare\' celebrates \'10th\' anniversary with loyal customers

இதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர், Vcare குழுமத்தின் நிறுவனர் திருமதி பிரபா ரெட்டி. இவரின் அயராத உழைப்பும், விடாமுயற்சியுடன் கூடிய பெரிய கனவுகளும் தான் தற்போதுள்ள சிகரத்தை தொடக்காரணம் என்றால் அது மிகையாகாது.

திருமதி. பிரபா அவர்கள் Vcare நிறுவனம் தொடங்கிய காலகட்டத்தில், முடி பிரச்சனைகள் மற்றும் அதை சரி செய்ய கொடுக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மக்களுக்கு தெரியாது. அப்போது அதிகமான மக்களுக்கு அலோபீசியா மற்றும் வழுக்கை போன்றவை அதிகமாக இருக்கும்.

இது திருமதி. பிரபாவிற்கும் Vcare நிறுவனத்திற்கும் ஒரு பெரிய சவாலாக இருந்தபோதும், தன் லட்சியத்தின் மீது நம்பிக்கை வைத்து ஆஸ்திரேலியாவின் டிரைகாலஜிஸ்ட்ஸ் இன்டர்நேஷனல் அசோசியேஷனில் ஒரு படிப்பை படித்து தன்னை தகுதிப்படுத்திக் கொண்டு, தென்னிந்தியாவின் முதல் டிரைகாலஜிஸ்ட்டாக மாறினார்.

தற்போது அனைத்து துறைகளிலும் ரசாயன பொருட்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆனால் Vcare நிறுவனம், அதன் வளமான இந்திய மூலிகைகளை நம்பி களத்தில் இறங்கியது.

Vcare மூலிகைகள், முடிக்கு தேவையான பல்வேறு தயாரிப்புகளை உருவாக்க ஆராய்ச்சி நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர். இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், அவர்களின் பிரச்சனைக்கு நல்ல தீர்வும் கிடைத்தது.

அதோடு Vcare நிறுவனமும், மக்கள் எங்களை ஆதரித்து நம்புவதன் மூலம் எங்களுக்கு மேலும் அதிகமாக பொறுப்பு கூடியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

நவீன காலத்தின் சிறந்த தொழில்நுட்பங்கள், புதுமையான நடைமுறைகளை உபயோகப்படுத்தி மக்களுக்கு பயனுள்ள தயாரிப்புகளுடன் வாடிக்கையாளருக்கு சேவை செய்யவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி Vcare நிறுவனம் தனது 10-வது ஆண்டு விழாவை தங்களின் நம்பிக்கையான வாடிக்கையாளர்களுடன் கொண்டாட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 'Vcare' celebrates '10th' anniversary with loyal customers | Business News.