'2 நாளாக முடங்கியுள்ள ஆன்லைன் சேவை'... ‘கடும் அதிருப்தியில் ஹெச்டிஎஃப்சி கஸ்டமர்ஸ்’!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Sangeetha | Dec 03, 2019 11:07 PM

முன்னணி வங்கிகளில் ஒன்றான ஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் ஆன்லைன் மற்றும் மொபைல் ஆப் சேவை 2 நாட்களாக முடங்கியுள்ளது, வாடிக்கையாளர்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. 

HDFC Bank net banking, mobile app down for 2nd day

நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்.டி.எப்.சி வங்கியின், நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் சேவை, கடந்த திங்கட்கிழமை காலை முதல் சரி வர இயங்கவில்லை. மாதத் தொடக்கத்தின் முதல் வேலை நாளே நெட் பேங்கிங் செயல்படாததால், சம்பளதாரர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த முடக்கம் ஏற்பட்டுள்ளதாக ஹெச்.டி.எஃப்.சி வங்கி ட்வீட் செய்த நிலையில், இன்றும் அதே பிரச்சனை எழுந்தது.

இதையடுத்து ஹெச்.டி.எஃப்.சி வங்கி, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தொழில்நுட்ப வல்லுநர்கள், கோளாறைச் சரி செய்யும் பணியில், ஓய்வின்றி தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பலரின் வங்கிக் கணக்குகள் செயல்படத் தொடங்கியுள்ளது. சிலருக்கு மட்டும் இந்த சிக்கல்கள் உள்ளது’ என்று தெரிவித்துள்ளது. கடந்த 2 நாட்களாக பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாமல் தவித்துவரும் வாடிக்கையாளர்கள், சமூக வலைத்தளங்களில் தங்களது ஆதங்கத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tags : #HDFC #CUSTOMERS #NETBANKING #MOBILEAPP