'10,000 வேலைகளை குறைக்க போறோம்... ' 'எங்களுக்கு நம்பர் 1 ஆகணும், வேற வழி தெரியல...' - அதிரடியாக அறிவித்த பிரபல நிறுவனம்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்நோக்கியா நிறுவனத்தில் புதிய தலைமை அதிகாரி அடுத்த இரு வருடங்களில் 10,000 பேரின் வேலைகளை குறைக்க முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
150வருடங்களுக்கு மேலாக வணிகதுறையில் கோலோச்சி வரும் நோக்கியா நிறுவனம் கடந்த சில வருடங்களாக சரிவை சந்தித்து வருகிறது எனலாம்.
இதன்காரணமாக கடந்த ஆண்டு புதிதாக பொறுப்பேற்ற நோக்கியாவின் தலைமை நிர்வாகி பெக்கா லண்ட்மார்க், நோக்கியா நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார்.
அவரின் முதல் கொள்கை நோக்கியா 5ஜி-யில் முன்னணி நிறுவனமாக வேண்டும் என செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். மேலும் அதற்கு நோக்கியா எதை வேண்டுமானாலும் செய்யும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது ஹவாய் நிறுவனத்திடமிருந்தும் பங்கைக் கைப்பற்றியுள்ளது.
இதற்கு காரணம் ஸ்வீடனின் எரிக்சன் மற்றும் சீனாவின் ஹவாய் ஆகிய இரு நிறுவனங்களுடன் போட்டிபோடுவதற்காக எனவும் செய்திகள் பரவி வருகின்றன. மேலும் அதற்குண்டான செலவை ஈடுசெய்யும் பொருட்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 10,000 வேலைகளை குறைப்பதற்கான திட்டங்களை நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் 2023 ஆம் ஆண்டில் 600 மில்லியன் யூரோக்கள் (715 மில்லியன் டாலர்) முதல் 700 மில்லியன் யூரோக்கள் வரை மறுசீரமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதிக்கு ஒதுக்க எதிர்பார்க்கப்படுகிறது என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டில் அல்காடெல்-லூசெண்டை கையகப்படுத்தும் போதும் இதே போல் ஆயிரக்கணக்கான வேலையாட்களை குறைத்ததும் குறிப்பிடத்தக்கது.