"'கொரோனா'வால 'பிசினஸ்' ரொம்ப அடி வாங்கிடுச்சு.." அடுத்த 'மாசம்' கிளம்ப ரெடி ஆகிக்கோங்க.." - நிறுவனத்தின் முடிவால் 'கலங்கி'ப் போன 'ஊழியர்'கள்!!!
முகப்பு > செய்திகள் > வணிகம்உலகம் முழுவதையும் கொரோனா தொற்று கடுமையாக அச்சுறுத்தி வரும் நிலையில், உலகளவில் வேலையிழந்து வருவோரின் சதவீதம் அதிகரித்து வருகிறது.

பல முன்னணி நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, அதனை சமாளிக்க வேண்டி ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில், மேரியட் இன்டர்நேஷனல் (Marriott International) நிறுவனம், பெதஸ்டாவிலுள்ள தலைமையகத்தில் அக்டோபர் மாதம் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
கடந்த வாரம் அந்த நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பணிநீக்கம் தொடர்பான தகவல் இடம்பெற்றுள்ளது. வருங்காலத்தில் இது போன்ற பணிநீக்கம் ஏற்படுமா என்பது தொடர்பாக மேரியட் இன்டர்நேஷனல் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு ஆரம்பித்த போதே மேரியட் இன்டர்நேஷனல், தங்களின் பல ஹோட்டல்களை தற்காலிகமாக அடைத்தது. மேலும், பல ஊழியர்களை தற்காலிகமாக பணிநீக்கமும் செய்திருந்தது. கொரோனா தொற்று காரணமாக, எங்கும் சுற்றுலா செல்ல முடியாத நிலையில், ஹோட்டல்கள் கடும் சரிவை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
