"இப்போதைக்கு '25,000' பேர தூக்குறோம்",,.. அடுத்த 'லிஸ்ட்'டும் ரெடியாக போகுதாம்,,.. 'முன்னணி' நிறுவனத்தின் முடிவால் கலங்கி போன 'ஊழியர்கள்'!!!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா பேரிடர் காரணத்தினால், உலகின் பல முன்னனி நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், உலகின் முன்னணி நிறுவனமான ஆக்ஸென்சர் ஐடி நிறுவனம் தங்களின் நூற்றுக்கணக்கான ஆஸ்திரேலிய ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ள நிலையில், உலகளவில் 5 சதவீத ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

நோய் தொற்று காலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சியின் காரணமாக ஆக்ஸென்சர் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. உலகளவில் 5 லட்சம் ஊழியர்கள் ஆக்ஸென்சர் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், அதில் 5 சதவீதம் பேர் என்றால் 25 ஆயிரம் ஆகும். இதனால் 25 ஆயிரம் ஊழியர்கள் கலங்கிப் போயுள்ளனர். வேலையிழப்பின் ஆரம்ப அலையில், கடைநிலையில் உள்ள 5 சதவீத ஊழியர்களை இலக்காக வைத்து கடந்த 14 ஆம் தேதிக்கு முன் இந்த முடிவை ஆக்ஸென்சர் நிறுவனம் எடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பெஞ்சில் இருக்கும் ஊழியர்களும் புதிய செயல்திறன் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், அவர்களையும் விரைவில் பணியை விட்டு தூக்குவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேலையிழப்பின் இரண்டாவது அலையின் போது அடுத்த 5 சதவீத ஊழியர்களையும் வேலைநீக்கம் செய்யவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்ற நிலையில், ஊழியர்களிடையே அது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
