"இதுக்கு மேலயும் தாங்க முடியாது டா சாமி",,.. 'முன்னணி' நிறுவனத்தின் முடிவால்..,, கதி 'கலங்கிப்' போன 'ஊழியர்கள்' !!!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, உலகம் முழுவதிலுமுள்ள பல முன்னணி நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.

இத்தகைய கடினமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி, பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி வருகிறது. இன்னும் கொரோனா தொற்றில் இருந்து உலகத்திற்கு விமோசனம் கிடைக்காத நிலையில், தொடர்ந்து நிறுவனங்கள் ஊழியர்களை நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் செயல்பட்டு வரும் கிளவுட் டேட்டா சேவை நிறுவனமான நெட்ஆப் (Net App) தனது பணியாளர்களில் 6 சதவீதம் பேரை பணியில் இருந்து நீக்கப் போவதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் இந்த பணிநீக்க அறிவிப்பால் பாதிக்கப்படும் ஊழியர்களில் பெரும்பாலானோர், 2015 ஆம் ஆண்டு என்ஜினியர்கள் மற்றும் டெவலப்பர்களாக பணிக்கு சேர்ந்தவர்கள் என தெரிகிறது.
நெட்ஆப் நிறுவனத்தில் 11,000 பேர் பணிபுரியும் நிலையில், அதில் 6 சதவீத ஊழியர்களை பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
