ஃப்ரஷர்ஸ்-க்கு அடித்த ஜாக்பாட்...! 'பிரபல ஐடி' நிறுவனம் 'மாஸ்' அறிவிப்பு...! - 'அரியர்' வச்சிருக்கவங்களுக்கு வாய்ப்பு உண்டா...?
முகப்பு > செய்திகள் > வணிகம்இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான TCS ஃப்ரஷர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது.

அதாவது, TCS நிறுவனம் தனது BPS (Business Processing Services) பிரிவுக்கு அண்மையில் பட்ட படிப்பை முடித்த ஃப்ரஷர்களை வேலையில் சேர்க்க திட்டமிட்டுள்ளது.
கலை மற்றும் அறிவியல் (Arts and Science), வர்த்தகம் (Commerce) ஆகிய துறைகளில் டிகிரி முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என TCS நிறுவனம் தெரிவித்துள்ளது.
வேலையில் சேர்க்கைப்படும் ஃப்ரஷர்கள் முதலில் பயிற்சி பெறுபவர்களாக (Trainee) எடுக்கப்படுவார்கள். அதில் சிறப்பாக செயல்படுவோருக்கு CBO (Cognitive Business Operations), Banking and Financial Services and Insurance (BFSI) மற்றும் Life Sciences ஆகிய பிரிவுகளில் பணியமர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
B.Com, BA, BBA, BCS, BCA அல்லது இதற்கு நிகரான படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எனினும், 2022-ஆம் ஆண்டில் டிகிரி முடிப்பவர்களுக்கு மட்டுமே BPS பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஆனால், அரியர் வைத்திருக்கும் மாணவர்களால் விண்ணப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 7 ஆகும். இதன்பின் ஜனவரி 26-ஆம் தேதி எழுத்துப்பூர்வ தேர்வு நடைபெறும். டிசிஎஸ் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க இந்த https://nextstep.tcs.com/campus/#/ இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும்.

மற்ற செய்திகள்
