'வேலை தேடுபவர்களிடையே இப்போது இதற்கே மவுசு'... 'குறிப்பாக ஐடி, சாப்ட்வேர் துறைகளில்'... 'ஆய்வில் வெளிவந்துள்ள தகவல்!'...
முகப்பு > செய்திகள் > வணிகம்இந்தியாவில் வீட்டில் இருந்து செய்யும்படி வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை 442 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் பல நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், ஐடி துறை போன்ற சில துறையினர் மட்டும் வீட்டிலிருந்தே வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு மவுசு அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. மேலும் ஐடி, சாப்ட்வேர் துறைகள், சுகாதாரம், மார்க்கெட்டிங், டெலிவரி ஆகிய துறைகளில் வேலை செய்வதற்கான வாய்ப்பு அதிகரித்து வருவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
வீட்டில் இருந்து வேலை செய்வதால் உற்பத்தி திறன் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்த பின்னர் தற்போது பல நிறுவனங்களும் வீட்டில் இருந்து வேலை செய்வதை தொடர்ந்து அனுமதித்து வருகின்றன. ஊழியர்களும் வீட்டில் இருந்து வேலை செய்வது சவுகரியமாக இருப்பதாக நினைப்பதால் அதையே தேர்வு செய்து வருகின்றனர். இதன் காரணமாக வீட்டில் இருந்து செய்யும்படி வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை கடந்த பிப்ரவரி முதல் ஜூலை வரை 442 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. தொலைதூரத்தில் இருந்தும் திறமை இருப்பவர்கள், குறிப்பாக பெண்களுக்கு இது மிகவும் சாதகமாக இருப்பதாகவே கருதப்படுகிறது.

மற்ற செய்திகள்
