விஜய்யின் மாஸ்டர்.. ''இது மிகப்பெரிய கௌரவம்.!'' - இப்போ இவர் செம ஹாப்பி.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் ட்விட்டரில் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். 

விஜய்யின் மாஸ்டர் பிரபலத்துக்கு சிறப்பான அங்கீகாரம் | vijay lokesh kanagaraj's master cinematographer sathyan sooryan is happy

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் மாயா, தீரன், கைதி உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள சத்தியன் சூர்யன் கேமராமேனாக வேலை செய்துள்ளார். 

இந்நிலையில் ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். இந்திய ஒளிப்பதிவாளர்கள் சமூகம் எனப்படும் I.S.C-ல் அவர் தற்போது இணைந்துள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ள அவர் தனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். 

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யின் மாஸ்டர் பிரபலத்துக்கு சிறப்பான அங்கீகாரம் | vijay lokesh kanagaraj's master cinematographer sathyan sooryan is happy

People looking for online information on ISC, Lokesh Kanagaraj, Master, Sathyan Sooryan, Vijay will find this news story useful.