"விஜய்சேதுபதி, அனிருத் கிட்ட கத்துக்கணும்" - 'மாஸ்டர்' நடிகை போட்ட பதிவு... ஏன் இப்டி சொல்றாங்க..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் 'மாஸ்டர்'. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு,அர்ஜுன் தாஸ், ரமேஷ் திலக் போன்ற பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ லாஞ்ச் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.

விஜய் சேதுபதி மற்றும் அனிருத் பற்றி மாஸ்டர் நடிகை மாளவிகா மோகனன் Master actress malavika mohanan about vijaysethupathi and anirudh

அப்போது எடுத்த ஒரு புகைப்படத்தை நடிகை மாளவிகா மோகனன் பதிவிட்டு இவ்வாறு கூறியுள்ளார், "விழா நேரங்களில் நேராக கவனம் செலுத்த முடியவில்லை. விஜய் சேதுபதி மற்றும் அனிருத்திடம் இதை   கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

ரசிகர்களோ "அதுக்கென்ன நீங்க செம அழகு" என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த பதிவை லைக் செய்துள்ளனர். பொதுவாகவே நடிகை மாளவிகா மோகன்னனுக்கு ரசிகர்கள் அதிகம். அவர் எதை செய்தாலும் அதை வைரலாக்கி விடுகிறார்கள். அதிலும் 'மாஸ்டர்' ஹீரோயின் என்றால் சும்மாவா என்று தளபதி ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

விஜய் சேதுபதி மற்றும் அனிருத் பற்றி மாஸ்டர் நடிகை மாளவிகா மோகனன் Master actress malavika mohanan about vijaysethupathi and anirudh

People looking for online information on Anirudh, Malavika Mohanan, Master, Vijay Sethupathi will find this news story useful.