www.garudabazaar.com

துணிவு படத்துல 'சில்லா சில்லா' ஓபனிங் பாடலா? பாடலாசிரியர் வைசாக் EXCLUSIVE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் குறித்து பாடலாசிரியர் வைசாக் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Vaisagh Exclusive about Thunivu Chilla Chilla Ajith Opening Song

Also Read | KGF நடிகரை திருமணம் செய்யப்போகும் பிரபல நடிகை ஹரிப்பிரியா.. வைரலாகும் நிச்சயதார்த்த PHOTOS!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

இந்த படத்தின் 3 போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

Vaisagh Exclusive about Thunivu Chilla Chilla Ajith Opening Song

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

Vaisagh Exclusive about Thunivu Chilla Chilla Ajith Opening Song

இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் சில்லா சில்லா இன்று வெளியாக உள்ளது.  இச்சூழலில் இந்த பாடல் குறித்து துணிவு படத்தின் பாடகரும் பாடலாசிரியருமான வைசாக் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், "முதலில் எழுதிய (காசேதான் கடவுளடா) பாடலை ஒரே நாளில் முடித்து விட்டேன். இந்த சில்லா சில்லா பாடலை எழுத 2 நாட்கள் எடுத்துக் கொண்டேன். முதல் பாடலை எழுதிய பிறகு சிலநாட்களுக்கு பின்னர் ஜிப்ரான் அவரது ஸ்டூடியோவுக்கு என்னை அழைத்தார். அப்போது ஒரு பீட்டை போட்டுக் காட்டினார். டிராக்கை கேட்ட உடனே தெரிந்தது. அஜித் சாருக்கு ஓபனிங் சாங் மாதிரியானு ஜிப்ரானிடம் கேட்டேன். அப்படி தான் சில்லா சில்லா பாடல் உருவானது." என வைசாக் கூறியுள்ளார்.

Also Read | வடிவேலுவுடன் ஷிவாங்கி.. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் BTS படங்களை பகிர்ந்து வைரல் பதிவு!

துணிவு படத்துல 'சில்லா சில்லா' ஓபனிங் பாடலா? பாடலாசிரியர் வைசாக் EXCLUSIVE! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vaisagh Exclusive about Thunivu Chilla Chilla Ajith Opening Song

People looking for online information on Ajith Kumar, Thunivu, Thunivu Chilla Chilla Song, Vaisagh will find this news story useful.