www.garudabazaar.com

"பொங்கலுக்கு சும்மா சரவெடி தான்".. சென்னையின் பிரபல தியேட்டரில் பிரம்மாண்ட Varisu, Thunivu பேனர்கள்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் அஜித் குமார் மற்றும் விஜய் ஆகியோர். விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படமும், அஜித் குமார் நடிக்கும் துணிவு திரைப்படமும் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில், ஜோதி தியேட்டரில் இரு படத்திற்காக வைக்கப்பட்டிருக்கும் பேனர்களின் புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

ajith thunivu and vijay varisu movie banners in chennai theatre

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தை வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

வாரிசு திரைப்படம், 2023 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், படத்தின் இரண்டு சிங்கிள்களான 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி' ஆகிய பாடல்களும் ரிலீஸாகி செம ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

அதே போல, நடிகர் அஜித் குமார் நடிப்பில், வரும் பொங்கலுக்கு 'துணிவு' திரைப்படமும் வெளியாக உள்ளது. இயக்குனர் H வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோருடன் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக துணிவு படத்தின் மூலம் கூட்டணி அமைத்துள்ளார் அஜித்.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர்களுடன் ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குனராக மிலன் பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

இப்படி இரண்டு பெரிய ஹீரோக்களான அஜித் குமார் மற்றும் விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் பொங்கல் விருந்தாக ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அப்படி ஒரு சூழலில், சென்னையில் உள்ள ஜோதி தியேட்டரில் வைக்கப்பட்டுள்ள துணிவு மற்றும் வாரிசு படத்தின் பேனர்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. இதில், துணிவு படத்தின் போஸ்டர் மேலே இருக்கும் நிலையில், அதன் கீழ் வாரிசு போஸ்டரும் இடம்பெற்றுள்ளது. தியேட்டரை சுற்றியுள்ள பகுதியில் இந்த பேனர்கள் தென்படும் நிலையில், ரசிகர்கள் எதிர்பார்ப்பையும் எகிற வைக்கும் வகையில் உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

ajith thunivu and vijay varisu movie banners in chennai theatre

People looking for online information on Ajith Kumar, H Vinoth, Thunivu, Vamsi Paidipally, Varisu, Vijay will find this news story useful.