www.garudabazaar.com

"துணிவு படமும் பொங்கலுக்கு தான்".. தெரிஞ்சதும் விஜய் சொன்ன வார்த்தை.. 'வாரிசு' நடிகர் கொடுத்த Update

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருப்பவர் விஜய். இவர் நடித்துள்ள வாரிசு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

vijay response after ajith kumar thunivu release with varisu

வாரிசு படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கி வரும் நிலையில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர். மேலும், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல் முறையாக ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, குஷ்பு, யோகிபாபு, ஷ்யாம், சங்கீதா உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்து வருகின்றனர்.

வாரிசு படத்திற்கு ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

vijay response after ajith kumar thunivu release with varisu

வாரிசு திரைப்படம், 2023 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், படத்தின் இரண்டு சிங்கிள்களான 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி' ஆகிய பாடல்களும் ரிலீஸாகி செம ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது போல, தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகரான அஜித் குமாரின் துணிவு திரைப்படமும் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை H வினோத் இயக்கி வருகிறார். இரண்டு முன்னணி ஹீரோக்களின் படங்கள் ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆவதால் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

vijay response after ajith kumar thunivu release with varisu

இந்த நிலையில், வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆவது குறித்து நடிகர் விஜய் சொன்ன விஷயம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகர் ஷ்யாம், நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் வாரிசு திரைப்படம் குறித்தும், நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி குறித்தும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது, அஜித் குமார் நடித்த துணிவு திரைப்படமும் பொங்கல் சமயத்தில் ரிலீஸ் ஆவது பற்றி அறிந்த விஜய்யின் ரியாக்ஷன் குறித்து பேசிய ஷ்யாம், "துணிவு பொங்கல் ரிலீஸ் என்றதும் நான் விஜய் அண்ணாக்கு போன் செய்தேன். அண்ணா, துணிவு announce பண்ணிட்டாங்கன்னு சொன்னேன். 'ஹேய், நல்ல விஷயம் தான்டா. அவரும் நம்ம நண்பர் தானே. ரெண்டு படமும் ஓடும். ரெண்டு படமும் ஓடட்டும். கொண்டாட்டமா இருக்கும். மக்களுக்கு ஒரு ட்ரீட்டா இருக்கட்டும்' அப்படின்னு சொன்னாரு.

vijay response after ajith kumar thunivu release with varisu

அங்கே எதுவுமே அவருக்கு இரண்டாவது எண்ணம் வரல. அவரு ரொம்ப பாசிடிவா யோசிக்க கூடியவரு. அவருக்கு பயம் எதுவும் கிடையாது" என ஷ்யாம் தெரிவித்தார். வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆவது பற்றி நடிகர் விஜய்யின் பதில் குறித்த விஷயம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

"துணிவு படமும் பொங்கலுக்கு தான்".. தெரிஞ்சதும் விஜய் சொன்ன வார்த்தை.. 'வாரிசு' நடிகர் கொடுத்த UPDATE வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

vijay response after ajith kumar thunivu release with varisu

People looking for online information on Ajith Kumar, Shyam, Thunivu, Varisu, Vijay will find this news story useful.