RRR Others USA
www.garudabazaar.com

CWC 2-ல 'புலிகேசி'.. CWC 3-ல புது வடிவேலுவின் செம கெட்டப்.. கில்லிப்பா இந்த சிவாங்கி..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் அளவு வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோவில் கோமாளியாக வரும் ஷிவாங்கியின் கெட்டப், இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sivaangi new getup as villu vadivelu in cwc 3 promo

பாக்கியலட்சுமி சீரியல் மேல புகாரா?.. பரபரப்பை ஏற்படுத்திய தகவல்.. உண்மை என்ன?. Exclusive

குக் வித் கோமாளி…

கடந்த 2019 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், குக் வித் கோமாளி சீசன் 1 வெளியானதை தொடர்ந்து மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக அதில் கோமாளிகளாக வந்த புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, தங்கதுரை, பிஜிலி ரமேஷ் உள்ளிட்டோரின் லூட்டிகள், ரசிகர்களை பெருமளவு ஈர்த்தது.

ஸ்ட்ரெஸ் பஸ்டர்…

இவ்வாறு உருவான குக் வித் கோமாளி நிகழ்ச்சி, தமிழ் நாட்டின் “ஸ்ட்ரெஸ் பஸ்டர்” என புகழ் பெற்றது. நடிகை வனிதா விஜயகுமார் குக் வித் கோமாளி சீசன் 1-ன் டைட்டிலை வென்றது குறிப்பிடத்தக்கது. சீசன் 1 முடிவடைந்ததுமே, சீசன் 2 எப்போது வரும் என ஏக்கத்துடன் காத்திருக்க தொடங்கினர் ரசிகர்கள்.

Sivaangi new getup as villu vadivelu in cwc 3 promo

சீசன் 2..

இந்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், குக் வித் கோமாளி சீசன் 2 ஆரம்பமானது. இதிலும் பாலா,ஷிவாங்கி, சுனிதா, மணிமேகலை, புகழ், தங்கதுரை ஆகியோரின் லூட்டிகள் ரசிக்கும்படியாக அமைந்தன. புதிய சீசனில் வந்த குக்குகளுடன் கோமாளிகள் அடித்த லூட்டிகள், மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்தது.

சீசன் 3..

இதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம், குக் வித் கோமாளி சீசன் 3 ஆரம்பமானது. இதில் ஏற்கனவே இருந்த கோமாளிகளுடன் சீத்தல், அதிர்ச்சி அருண், மூக்குத்தி முருகன், பரத் ஆகியோர் புதிய கோமாளிகளாக களமிறங்கினர். இதில் குக்குகளாக அம்மு அபிராமி, அந்தோனி தாசன், ராகுல் தாத்தா, ரோஷினி, கிரேஸ் கருணாஸ், ஷ்ருதிகா அர்ஜூன், சந்தோஷ் பிரதாப், தர்ஷன், வித்யூலேகா ராமன், மனோ பாலா ஆகியோர் பங்கேற்றனர்.

Sivaangi new getup as villu vadivelu in cwc 3 promo

வடிவேலுவாய் மாறிய சிவாங்கி

இதனையடுத்து, தற்போது வெளியான ப்ரோமோ ஒன்றில், சிவாங்கியின் கெட்டப் அதிகம் வைரலாகி வருகிறது. கடந்த குக் வித் கோமாளி இரண்டாம் சீசனில், ஒரு முறை வடிவேலுவின் இம்சை அரசன் புலிகேசி கெட்அப்பில் வந்து அசத்தி இருந்தார் சிவாங்கி.

கெட்அப் சும்மா அள்ளுது

அந்த வகையில், தற்போதைய சீசனின் புதிய ப்ரோமோவில், மீண்டும் ஒரு முறை வடிவேலு கெட்அப்புக்கு மாறியுள்ளார் சிவாங்கி. விஜய் மற்றும் நயன்தாரா நடிப்பில், வெளியாகி இருந்த 'வில்லு' திரைப்பதில் வரும் வடிவேலுவுக்கு கோன் போன்ற வடிவில் தலைமுடி இருக்கும்.

இந்த படம் வெளியான சமயத்தில், அந்த ஹேர் ஸ்டைல் அதிகம் ட்ரெண்ட் ஆகி இருந்தது. அதே போல, நீண்ட முடியுடன் குக் வித் கோமாளி செட்டில் வலம் வரும் சிவாங்கியின் லுக்கும், குக் வித் கோமாளி ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

Sivaangi new getup as villu vadivelu in cwc 3 promo

இதன் முழு எபிசோடை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

BB Ultimate : அடுத்தடுத்து சர்ப்ரைஸ் என்ட்ரி.. கட்டித் தழுவி வரவேற்ற ஹவுஸ்மேட்ஸ்.. இனி களைகட்டும்..

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sivaangi new getup as villu vadivelu in cwc 3 promo

People looking for online information on Cook With Comali Show, CWC Sivaangi, CWC3, Sivaangi, Vijay Television will find this news story useful.