RRR Others USA
www.garudabazaar.com

BB Ultimate : அடுத்தடுத்து சர்ப்ரைஸ் என்ட்ரி.. கட்டித் தழுவி வரவேற்ற ஹவுஸ்மேட்ஸ்.. இனி களைகட்டும்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது இரண்டு பிரபலங்கள், அடுத்தடுத்து போட்டியாளர்களாக என்ட்ரி கொடுத்து அசத்தியுள்ளனர்.

BB Ultimate sandy and dheena enter as new contestants

"கடலுக்கே ஜுரம் வந்துரும்.." பிகினியில்.. சன்னி லியோன்.. மாலத்தீவு on சன்னி கண்ட்ரோல்..

விஜய் டிவியில் இதுவரை ஐந்து பிக்பாஸ் சீசன்கள் ஒளிபரப்பாகியுள்ளது. இவை அனைத்துமே மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பலரும், தங்களுக்கென ஏராளமான ரசிகர்களையும் உருவாக்கிக் கொண்டனர்.

பிக்பாஸ் அல்டிமேட்

இதனையடுத்து, பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு, தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்னும் நிகழ்ச்சி, டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் இருந்து சிலர் மீண்டும் களமிறங்கினர்.

வெளியேறிய அனிதா, சுரேஷ்

மேலும் சில போட்டியாளர்கள், வைல்டு கார்ட் என்ட்ரி மூலம் புதிதாகவும் உள்ளே நுழைந்தனர். அந்த வகையில், நடிகை ரம்யா பாண்டியன் மற்றும் KPY சதிஷ் ஆகியோர் உள்ளே வந்தனர். இதில், ரம்யா பாண்டியன் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் தான். சமீபத்தில் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் போட்டியில் இருந்து அடுத்தடுத்து வெளியேறினர்.

அடுத்தடுத்து சர்ப்ரைஸ் என்ட்ரி

இதில், சுரேஷ் சக்கரவர்த்தி தன்னுடைய உடல்நிலை காரணமாக, தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியாத நிலையில், விலகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான், இரண்டு போட்டியாளர்கள் அடுத்தடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர். KPY நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து, தற்போது பல திரைப்படங்களிலும் நடித்து வருபவர் தீனா.

ஹைலைட்டாக அமைந்த கவுண்டர்

இவர் முதல் ஆளாக, பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தார். மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் தீணாவை வரவேற்கவே, சதீஷை பார்த்து, தீனா கொடுத்த கவுண்டர் தான், ஹைலைட்டாக அமைந்திருந்தது. தீனாவிடம், சதீஷ் ஏதோ கேட்க, "என்ன, பேசுறே?"என ஆச்சரியத்துடன் கேட்டார் தீனா. காமெடி நிகழ்ச்சியில் பட்டையைக் கிளப்பும் சதீஷ், பிக்பாஸ் வீட்டில் தான் உண்டு, தான் வேலையுண்டு என இருக்கிறார்.

BB Ultimate sandy and dheena enter as new contestants

டான்ஸுடன் என்ட்ரி

இதனால், அவரைக் கிண்டலடிக்கும் வகையில் தான் தீனா அப்படி கேட்க, மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் அனைவரும் சத்தம் போட்டு சிரிக்கத் தொடங்கி விட்டனர். தீனாவுக்கு அடுத்தபடியாக, தற்போது மற்றொரு பிரபலமும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட டான்ஸ் மாஸ்டர் சாண்டி, சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்துள்ளார்.

நடனம் ஆடிக் கொண்டே உள்ளே வந்த சாண்டியை மற்ற போட்டியாளர்கள் ஆரத்தழுவி வரவேற்ற நிலையில், சில டான்ஸ் ஸ்டெப்பினையும் இணைந்து போட்டிருந்தனர். ஏற்கனவே சாண்டி கலந்து கொண்ட போது, கடைசி வரை மிகவும் கலகலப்பாக இருந்து, ரசிகர்களின் பாசிட்டிவ் கமெண்ட்டுகளை அள்ளி இருந்தார்.

BB Ultimate sandy and dheena enter as new contestants

அடுத்தடுத்து, போட்டியாளர்களின் என்ட்ரியால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

பாக்கியலட்சுமி சீரியல் மேல புகாரா?.. பரபரப்பை ஏற்படுத்திய தகவல்.. உண்மை என்ன?. Exclusive

தொடர்புடைய இணைப்புகள்

BB Ultimate sandy and dheena enter as new contestants

People looking for online information on BB Ultimate, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate, KPY Dheena, New Contestants, Sandy Master will find this news story useful.