www.garudabazaar.com

SPB-ஐ நினைவு படுத்தும் சிவாங்கியின் செம பாட்டு.. குவியும் ரசிகர்களின் பாராட்டு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 03, பிப்ரவரி 2022 :- விஜய் டிவியில் சூப்பர் சிங்கராக அறிமுகமானவர் சிவாங்கி. பாடகராக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அறிமுகமாகி, பின்னர் விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாகவே மாறிவிட்டார்.

Sivaangi Vennilavum Ponni Nadhiyum music video is out

குக் வித் கோமாளி..

அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்ற சிவாங்கியை அனைவருக்கும் பிடித்துப் போனது. பாடல் மட்டுமல்லாமல் என்டர்டெயினும் பண்ணும் அவருடைய பாங்கு அனைவரையும் கவர்ந்தது. தனக்கே உரிய இயல்பான மற்றும் துரு துரு நடவடிக்கைகளால் சிவாங்கி அனைவராலும் கவனிக்கப்பட்டார்.

பாடகி, நடிகை சிவாங்கி..

இதேபோல் சிவாங்கியின் பாடலையும் அனைவரும் விரும்பிக் கேட்பதுண்டு. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கி, பாடியதை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வெகுவாக பாராட்டியிருந்தார். இதேபோல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிவாங்கி பாடிய பாடல்களுக்கும் பல ரசிகர்கள் உள்ளனர். இப்படி சிவாங்கியின் பாடல் மற்றும் நடிப்பு இரண்டுமே ரசிகர்கள் பட்டாளம் தற்போது உருவாகி விட்டனர்.

சிவாங்கியின் திரைப்படங்கள்..

இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படத்தில் சிவாங்கி, ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதேபோல் வலிமை திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பிலான, ஆர்டிகல் 15 என்கிற இந்தி டூ தமிழ் ரீமேக் படத்தில் சிவாங்கி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் உதயநிதி கதாநாயகனாக நடிக்கிறார். அருண் ராஜா காமராஜ் இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.

வெண்ணிலவும் பொன்னி நதியும்

இந்நிலையில் தற்போது சிவாங்கி, ‘வெண்ணிலவும் பொன்னி நதியும்’ என்கிற பாடலை பெர்ஃபார்ம் செய்துள்ள மியூசிக் வீடியோ வெளியாகியுள்ளது. மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய, ‘மண்ணில் இந்த காதலன்றி’ பாடலின் இடையில் வரக்கூடிய இந்த வரிகள் மிகவும் பிரபலம். இந்த பாடலை தான் தற்போது சிவாங்கி பாடி இருக்கிறார்.

மோகன் ராஜன் எழுதிய இந்த பாடலை சிவாங்கி மற்றும் AdyKriz பாடியிருக்கின்றனர். இந்த பாடலுக்கு AdyKriz இசை அமைத்திருக்கிறார். திங்க் மியூசிக் இந்தியா இந்த பாடலை வெளியிட்டு இருக்கிறது.

இந்த பாடலை கேட்டவுடன் ரசிகர்கள் பலரும் எப்போதும்போல சிவாங்கி Rock பண்ணுகிறார் என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Also Read: "தாத்தா 15 வருஷம் ஜெயில்".. "பாட்டிய 32 முறை சுட்டாங்க".. "அப்பா...".. நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி உருக்கம்.

தொடர்புடைய இணைப்புகள்

Sivaangi Vennilavum Ponni Nadhiyum music video is out

People looking for online information on Cook with comali 3, Cook With Comali Season 3, Sivaangi, Vijay Television will find this news story useful.