RRR Others USA
www.garudabazaar.com

கட்சி ஆரம்பிக்கும் கிங்ஸ்லீ??பேயை தொண்டராக சேர்க்க முடிவு..வைரலாகும் இடியட் ஸ்னீக் பீக்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

1.முதல்வராக ஆசைப்படும் கிங்ஸ்லீ…கட்சி ஆரம்பிப்பது குறித்து மிர்ச்சி சிவாவுடன் ஆலோசனை..

lollu sabha director next film sneak peek released

2.கட்சி ஆரம்பிக்கும் கிங்ஸ்லீ??பேயை தொண்டராக சேர்க்க முடிவு..வைரலாகும் இடியட் ஸ்னீக் பீக்

மிர்ச்சி சிவா, கிங்ஸ்லீ,நிக்கி கல்ரானி, ஆகியோரின் நடிப்பில் வெளியாகவிருக்கும் இடியட் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மிர்ச்சி சிவா-கிங்ஸ்லீ…

சென்னை-28 திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் மிர்ச்சி சிவா.இவரின் ஹ்யூமர் சென்ஸும் நகைச்சுவையை வெளிப்படுத்தும் முக பாவனையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.குறிப்பாக “தமிழ் படம்” திரைப்படத்திற்கு பிறகு சிவாவுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் கூடியது என்று சொன்னால் மிகையாகாது.

அடுத்ததாக கிங்ஸ்லீ, இவர் சந்தானம் கதாநாயகனாக நடித்த “ஏ1” , கோலமாவு கோகிலா ஆகிய திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் பதிந்தார். பின்பு டாக்டர்,நெற்றிக்கண்,அண்ணாத்த, என பல படங்களில் தனது இயல்பான மற்றும் தனித்துவமான நகைச்சுவை பாணியை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

இடியட்…

மிர்ச்சி சிவா,நிக்கி கல்ரானி ஆகியோர் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் இடியட்.இத்திரைப்படத்தில் இவர்களுடன் கிங்ஸ்லீயும் நடித்துள்ளார்.மேலும் இத்திரைப்படத்தில் ஊர்வசி,ஆனந்த்ராஜ்,ரவி மரியா,மயில்சாமி,சிங்கமுத்து,அக்சரா கவுடா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

lollu sabha director next film sneak peek released

இயக்குனர் ராம்பாலா..

பிரபல தொலைக்காட்சியில் வெளியாகி மக்களை மகிழ்வித்த தொடர்களில் லொள்ளு சபாவும் ஒன்று.அத்தொடரின் இயக்குனர் ராம் பாலா தான் இத்திரைப்படத்தையும் இயற்றியுள்ளார்.இவர் இதற்கு முன்பு இயக்கி நடிகர் சந்தானம் நடிப்பில் வெளிவந்த தில்லுக்கு துட்டு பாகம்1,2 ஆகிய திரைப்படங்கள் சக்கை போடு போட்டன என்பதை மறந்திருக்கமாட்டோம்.காமெடி கலந்த ஹாரர் திரைப்படமான தில்லுக்கு துட்டு இடைவிடாது நகைச்சுவை காட்சிகளால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டதால் இத்திரைப்பட்டத்திற்கும் ரெஸ்பான்ஸ் எகிறியுள்ளது.

நிக்கி கல்ரானி

டார்லிங் திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நிக்கி கல்ராணி.டார்லிங் திரைப்படத்திற்கு பிறகு “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” “”கலகலப்பு 2” “நெருப்புடா” “மொட்டை சிவா கெட்ட சிவா” என பல படங்களில் நடித்துள்ளார்.”சார்லி சாப்ளின் 2” திரைப்படத்தில் இடம்பெற்ற “சின்ன மச்சான்” பாடல் இளைஞர்களின் மனதை குத்தாட்டம் போட வைத்தது என்பதை நாம் மறந்திருக்க மாட்டோம்.டார்லிங் திரைப்படத்தை போலவே இத்திரைப்படத்திலும் நிக்கி கல்ராணி பேயாக நடித்திருப்பதால் ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர்.

lollu sabha director next film sneak peek released

காமெடிக்கு பஞ்சமில்லை..

அதே போல் சிவா, கிங்ஸ்லீ, நிக்கி கல்ராணி,இயக்குனர் ராம் பாலா போன்றோர் கூட்டணி சேர்வதால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது.

இடியட் ஸ்னீக் பீக்..

இந்நிலையில் இடியட் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் இன்று வெளியாகியுள்ளது.இதில் சிவா மற்றும் கிங்ஸ்லீ ஆகியோரின் நடிப்பும் அவர்களின் நகைச்சுவையும் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

இடியர் ட்ரைலர்..

கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடியட் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது வெளியாகியுள்ள இடியட் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அட..பூஜா ஹெக்டே பகிர்ந்த 'பீஸ்ட்' படத்தின் கலர்புல்லான BTS ஸ்டில்! கூட இவங்கெல்லாம் இருக்காங்க?

கட்சி ஆரம்பிக்கும் கிங்ஸ்லீ??பேயை தொண்டராக சேர்க்க முடிவு..வைரலாகும் இடியட் ஸ்னீக் பீக் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

lollu sabha director next film sneak peek released

People looking for online information on Idiot, Lollu Sabha, Lollu sabha director, Nikki Galrani, Ram Bala, Shiva will find this news story useful.