www.garudabazaar.com

சிவாங்கியை தேடி வந்த ரசிகர்.‌. கொடுத்த சர்ப்ரைஸ்! ரியாக்ஷன நீங்களே பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2019ஆம் ஆண்டு விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் சிவாங்கி. அந்த சீசனில் சிறந்த பாடகியாகவும் புகழ் பெற்றார். அதன்பின் 2020ஆம் ஆண்டு விஜய் டிவி தொலைக்காட்சியின் பிரபல நகைச்சுவை  நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இவர் 2009ஆம் ஆண்டு வெளிவந்த பசங்க படத்தின் "அன்பாலே அழகாகும்" என்ற பாடலை பாடி பல பாராட்டுகளையும் பெற்றார்.

Anchor sivaangi gets surprise gift from a fan

தனது சுட்டித்தனமான குரலாலும், சிறுபிள்ளைத்தனமான குறும்பாலும்,  தனது முக பாவனை மூலம் பல ரசிகர்களை கவர்ந்தார். இவர் அஸ்வின் மற்றும் புகழுடன் இணைந்து பல தொகுப்புகளில் பணியாற்றி மிகவும் வரவேற்பைப்பெற்றார். இவர் பாடகியாக மட்டும் இல்லாமல் தனது நகைச்சுவை திறமையால் புகழ் பெற்றவர் என்றே கூறலாம்.

Anchor sivaangi gets surprise gift from a fan

அதன்பின் 2020ஆம் ஆண்டு இசையமைப்பாளர் தரண் குமார் இசையில் "அஸ்கு மாரோ" என்ற பாடலை தமிழ் மற்றும் தெலுங்கில் பாடி அந்த ஆல்பம் பாட்டில் ஒரு  கேமியோ ரோலிலும் நடித்தார். அதன்பின் நடிகர் சாந்தனு நடித்துள்ள "முருங்கைக்காய் சிப்ஸ்" என்ற படத்தில் சாம் விஷாலுடன் இணைந்து Talk less work moreu என்ற பாடலையும் பாடியுள்ளார். வினித் சீனிவாசனுடன் "அடிபொலி "என்ற பாடலையும் நடிகர் சிம்புவுடன் மாயன் படத்திற்காக "மச்சி" என்று பல பாடலையும் பாடியுள்ளார்.

Anchor sivaangi gets surprise gift from a fan

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனான சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்து வரும் "டான்" படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.  நடிகர் சிவா மற்றும் நடிகை ப்ரியா ஆனந்துடன் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த "கிளாசிக் "படத்தின் ரீமேக்கிலும் நடித்து வருகிறார். மேலும் யூடியூப்பில் தனக்கென ஒரு சேனலை உருவாக்கி அதில் அவ்வப்போது வீடியோவும் வெளியிட்டு வருகிறார். அதில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Anchor sivaangi gets surprise gift from a fan

சமீபத்தில் இவருக்கு ரசிகர் ஒருவர் பரிசு வழங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ரசிகர் சிவாங்கியிடம் அவரது போட்டோ பிரேம் ஒன்றை பரிசாக வழங்குகிறார். அதன்பின் Tatto இருக்கிறது காட்டவா என்று அவரது ரசிகர் கேட்டதற்கு அப்படியெல்லாம் பண்ணாதீங்க, ஏங்க எப்படி பண்றீங்க என்று செல்லமாக கேட்கிறார்.இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவுகிறது.

சிவாங்கியை தேடி வந்த ரசிகர்.‌. கொடுத்த சர்ப்ரைஸ்! ரியாக்ஷன நீங்களே பாருங்க! வீடியோ

மேலும் செய்திகள்

Anchor sivaangi gets surprise gift from a fan

People looking for online information on சூப்பர் சிங்கர், ஷிவாங்கி, CookWithComali, Sivaangi, SuperSinger will find this news story useful.