www.garudabazaar.com

பாக்குற நமக்கே டயர்ட் ஆவுதே... சமந்தாவே பகிர்ந்த வேற லெவல் வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹைத்ராபாத்: நடிகை சமந்தா கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

samantha shares her gym workout video on instagram

சமந்தாவின் எழுச்சி

சமந்தா (Samantha) தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்கிய மாஸ்கோவின் காவேரி படம் மூலம் தமிழ் சினிமாவில அறிமுகமானார். விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. சென்னை பல்லாவரத்தை சார்ந்த இவர், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்துக்குப் பிறகும் கூட தொடர்ச்சியாக நடித்து வந்த சமந்தா சமீபத்தில் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார்.

samantha shares her gym workout video on instagram

ஒ அண்ட்டா வா மாவா

விவாகரத்துக்கு பின் தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம்,  தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா' படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தின் ஒ அண்ட்டா வா மாவா பாடலுக்கு நடனமாடி வைரலானார். இந்த பாடல் தென்னிந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது. வீடியோ வெளியான மூன்று நாளில் 27 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மாஸ் ஹிட் அடித்துள்ளது.

தலைவன் வேற ரகம்... டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் சிம்பு! வெளிவந்த சூப்பர் மாஸ் புகைப்படங்கள்!

 

samantha shares her gym workout video on instagram

உடற்பயிற்சி சவால்

இந்நிலையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி உள்ளார். அதில் தனது ரசிகர்களுக்கு சவால் விடுத்துள்ளார். அந்த சவால் என்னதென்றால் எந்த ஒரு உடற்பயிற்சி உபகரண கருவிகள் இல்லாமல் உடற்பயிற்சி செய்து கலோரிகளை எரிக்க வேண்டும் என சவால் விடுத்துள்ளார். இதை சமந்தாவின் ஜிம் பயிற்சியாளர் ஜூனைத் ஷேக் சமந்தாவுக்கு சவாலாக விடுத்தாராம், இந்த சவாலை ஏற்றுக்கொண்ட சமந்தா இதையே ரசிகர்களுக்கும் சவாலாக விடுத்துள்ளார்.

சாய்னா நேவால் - சித்தார்த் விவகாரம்: சாய்னாவுக்கு ஆதராவாக கொதித்தெழுந்த சாய்னாவின் கணவர்!

samantha shares her gym workout video on instagram

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

samantha shares her gym workout video on instagram

People looking for online information on உடற்பயிற்சி, சமந்தா, Gym workout, Samantha will find this news story useful.