www.garudabazaar.com

அதை விட ரொம்ப கஷ்டமான விஷயம்.. "ஓ சொல்றியா மாமா" சமந்தாவே அளித்த பதிலை கவனித்தீர்களா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் சமந்தா. பல வெற்றி படங்களை கொடுத்து இருந்தாலும் தற்போது இவரைப்பற்றி ஹாட்டாக் ஆக இருப்பது இவர் நடனமாடிய "ஓ சொல்றியா மாமா" பாடலை பற்றி தான்.

Oh solriya mama glamour is tough to handle - samantha

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா நடித்த திரைப்படம் தான் புஷ்பா. இந்த படத்தில் வரும் ஓ சொல்றியா மாமா   பாடல் பல சர்ச்சைகளை கிளப்பினாலும், மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

Oh solriya mama glamour is tough to handle - samantha

புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய சமந்தாவை பற்றி பல சர்ச்சை கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அதை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவை போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது "நான் நல்ல கதாபாத்திரத்தில் நடித்தேன், சில மோசமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளேன், சீரியஸாகவும் நடித்துள்ளேன். ஒரு தொகுப்பாளராகவும் இருந்துள்ளேன். தான் செய்யும் எல்லா வேலைகளிலும் சிறந்து விளங்க அவர் கடினமாக உழைத்து வருவதாகவும், கவர்ச்சி என்பது தனக்கு அடுத்தகட்ட கடினமான வேலையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Oh solriya mama glamour is tough to handle - samantha

ரசிகர்கள் இந்த பாடலுக்கு கொடுத்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்தும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். எத்தனை நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தாலும், அதை எல்லாம் தாண்டி இந்த பாடல் பிரபலமாகி இருப்பதும், யூடியூபில் ட்ரெண்டிங்கில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Oh solriya mama glamour is tough to handle - samantha

பல சினிமா ரசிகர்கள் முணுமுணுக்கும் பாடலாகவும் இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் சமந்தா சினிமாவின் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு செல்வார் என்பது ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Oh solriya mama glamour is tough to handle - samantha

People looking for online information on Ohsolriyamama, Pushpa, Samantha, Samantharuthprabhu will find this news story useful.