www.garudabazaar.com

"ஐட்டம் Song நான் பண்ணா இப்படிதான் இருக்கும்!".. அஜித் பட நாயகியின் 'ஓ சொல்றியா மாமா'.. வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை கனிகா ஓ சொல்றியா பாடலுக்கு கண் அசைவு காட்டி ஒரு வீடியோ பண்ணியிருப்பதுடன் ஒரு ட்ரெண்டிங் பதிவையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.

actress kanika video Samantha Oo Solriya Mama Song

நடிகை கனிகா:

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பன்மொழிகளிலும் பிரபலமானவர் நடிகை கனிகா. இவர் தமிழில் எதிரி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராஃப் திரைப்படத்தில் நடிகை கனிகாவை அனைவரும் கவனித்தனர்.

அஜீத் பட நாயகி:

அதன் பின்னர் நடிகர் அஜீத் குமார்  நடித்த வரலாறு திரைப்படத்தில் கனிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்ததை தொடர்ந்து வெகுஜன மத்தியிலும் பரவலாக அறியப்பட்டார். அதன் பின்னரும் நடிப்பில் பிஸியாக இருந்த கனிகா முன்னணி நடிகர்களுடனான மலையாள மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தார்.

இவருக்கு திருமணம் ஆகி இவருக்கு ஒரு மகன் இருக்கார். இந்நிலையில் கனிகா  ‘ஓ சொல்றியா மாமா’ பாட்டுக்கு கண் அசைவு காட்டி செய்துள்ள வீடியோவும், அந்த வீடியோவுடன் இணைந்து அவர் பதிவிட்டுள்ள பதிவும் வைரலாகியுள்ளது.

ஓ சொல்றியா மாமா:

நடிகை சமந்தா நடனம் ஆடியுள்ள ஓ சொல்றியா மாமா பாடல் புஷ்பா திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. நடிகர் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தன்னா மற்றும் ஃபகத் ஃபாசில் மற்றும் பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இடம் பெற்ற துள்ளல் பாடல் தான் ஓ சொல்றியா மாமா. ஒரு கேளிக்கை விடுதியில் நடனம் ஆடும் பெண், ஆண்களை பற்றி பாடுவதாய் அமைந்துள்ள இந்த பாடலை விவேகா எழுதியுள்ளார்.  இந்த பாடல், இணையத்திலும் இளைஞர்களிடத்திலும் படு டிரெண்டிங்காக இருந்து வருகிறது.

ஐட்டம் பாட்டு:

இந்நிலையில் இந்த பாடலுக்கு கண்களாலேயே அபிநயம் புரிந்துள்ளார் நடிகை கனிகா, இந்த வீடியோவுடன் அவர் பதிவிட்டுள்ள அந்த பதிவில்,  “ஒரு ஐட்டம் பாட்டுக்கு என்னால இவ்வளவு தான் ஸ்டெப் போட முடியும்! எனக்கு எதுக்கு அந்த செக்ஸி கிளாப்ஸ்ல்?” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் சமந்தாவுக்கு ஒரு சிறப்பு மெசேஜாக, “பேபி யு லுக் bomb..” என்று குறிப்பிட்டிருக்கிறார். அதாவது சமந்தா தெறிக்கவிட்டிருக்கிறார் என்பதை கனிகா பதிவு செய்து சமந்தாவுக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

"ஐட்டம் SONG நான் பண்ணா இப்படிதான் இருக்கும்!".. அஜித் பட நாயகியின் 'ஓ சொல்றியா மாமா'.. வைரல் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

actress kanika video Samantha Oo Solriya Mama Song

People looking for online information on Actress kaniha, Kanika, Oh Solreya mama, Oh Solriya mama, Oo Solreya mama Oo Oo Solreya, Samantha, Samantha ruth prabhu will find this news story useful.