Pattamboochi

"விஜய் அண்ணாவுக்கு கடைசியா அனுப்பிய Message.." ரசிகர் கேள்விக்கு.. மாளவிகா சொன்ன அசத்தல் பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரசிகர் ஒருவர் ட்விட்டரில் நடிகர் விஜய் குறித்து கேட்ட கேள்வியும், அதற்கு நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்த பதிலும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Malavika mohanan about her last message to vijay in whatsapp

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பேட்ட', விஜய் நடிப்பில் உருவான 'மாஸ்டர்' உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம், தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனவர் நடிகை மாளவிகா மோகனன்.

இதனைத் தொடர்ந்து, தனுஷுடன் இணைந்து அவர் நடித்திருந்த 'மாறன்' திரைப்படமும், கடந்த மார்ச் மாதம் வெளியாகி இருந்தது.

மாளவிகா மோகனனின் இசை வீடியோ

இதன் பின்னர், சில திரைப்படங்களில் பிசியாக நடித்தும் வருகிறார் மாளவிகா மோகனன். அந்த வகையில், பிரபல ராப் இசை பாடகர் பாட்ஷா & பாடகர் பாயல் தேவ்வுடன் இணைந்து, மாளவிகா மோகனன் நடித்திருந்த  இசை வீடியோவான 'TAUBA', இன்று (24.06.2022) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வீடியோவில், பாட்ஷாவுடன் இணைந்து, நடனமாடவும் செய்துள்ளார் மாளவிகா மோகனன்.

ரசிகர்களுடன் கலந்துரையாடல்

இதனை முன்னிட்டு, ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வையும் ட்விட்டரில் மாளவிகா மோகனன் நடத்தினார். அதில், ரசிகர்கள் கேட்ட ஏராளமான கேள்விகளுக்கும் அதிரடியாக பல பதில்களை அளித்திருந்தார் மாளவிகா. பொதுவாக, திரைப்படங்களில் ஒரு பக்கம் தீவிரமாக மாளவிகா மோகனன் இயங்கி வந்தாலும், சமூக வலைத்தளஙகளில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பதிவேற்றுவதையும், ரசிகர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளவர் மாளவிகா மோகனன்.

Malavika mohanan about her last message to vijay in whatsapp

விஜய் பற்றி ரசிகர் கேட்ட கேள்வி

அந்த வகையில், Tauba இசை வீடியோ வெளியான பிறகு, ட்விட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மாளவிகா பதிலளித்து வந்தார். இதில், கும்பகோணம் குறித்தும், விக்ரம் திரைப்படம் குறித்தும், நடிகர் யஷ் குறித்தும் மாளவிகா மோகனன் தெரிவித்திருந்த பதில்கள், அதிகம் வைரலாகி இருந்தது. அந்த வகையில், நடிகர் விஜய் குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வியும், அதற்கு மாளவிகா சொன்ன பதிலும் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

 

"நடிகர் விஜய் அண்ணாவுக்கு நீங்கள் வாட்ஸ் அப்பில் கடைசியாக அனுப்பிய மெசேஜ் என்ன?" என ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு வீடியோவை பதிவிட்டு பதில் சொன்ன மாளவிகா மோகனன், "பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்ற மெசேஜை தான் கடைசியாக அனுப்பி இருந்தேன்" என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Malavika mohanan about her last message to vijay in whatsapp

People looking for online information on Malavika Mohanan, Vijay will find this news story useful.